"காந்தப்படுக்கை" விற்றதில் பல கோடி மோசடி: 84 பேர் கூண்டோடு கைது
சென்னை:
"மல்டி லெவல் மார்க்கெட்டிங்" என்ற பெயரில் பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் அளவுக்கு காந்தப்படுக்கைகளை விற்று மோசடி செய்த நிறுவனத்தைச் சேர்ந்த 84 பேரை (இவர்களில் பலர் டாக்டர்கள்,இன்ஜினியர்கள்) சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.
தமிழகத்தில் சமீப காலமாக "மல்டி லெவல் மார்க்கெட்டிங்" என்ற முறை பிரபலமாகி வருகிறது.வாடிக்கையாளர்களிடம் நேரடியாக உற்பத்திப் பொருட்களை விற்பதுதான் இதன் முக்கிய அம்சம்.
கடை கிடையாது, முதலாளி கிடையாது. ஆனால் கவர்ச்சிகரமான கமிஷன் என்று அறிவிக்கப்படுவதால்,ஏராளமான பேர் இந்த மார்க்கெட்டிங் முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோலவே, "ஜப்பான் லைப் இந்தியா" என்ற அமைப்பு தனது "மல்டி லெவல் மார்க்கெட்டிங்" முறையைசென்னையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
முதுகுவலி உள்ளிட்ட பல்வேறு உபாதைகளுக்கு நிவாரணம் அளிக்கும் காந்தப் படுக்கைகளை அது விற்கத்தொடங்கியது. அதன் விற்பனை முறை வாடிக்கையாளர்களை ஈர்க்கத் தொடங்கியது.
இது மிகவும் ஈசியானதாகவும், கவர்ச்சிகரமாகவும் இருந்ததால் விரைவிலேயே ஏராளமான பேர் இந்தமார்க்கெட்டிங் முறையில் சேர்ந்தனர்.
இதில் முகவராக சேரும் நபர் மூன்று வாடிக்கையாளர்களைப் பிடித்துத் தர வேண்டும். அப்படிப் பிடித்துத் தந்தால்அதற்குரிய கமிஷன் தொகை கிடைக்கும். அதன் பிறகு அவர் பிடித்துத் தந்த மூன்று பேரும் தலா மூன்று பேரைவாடிக்கையாளர்களாகப் பிடித்துத் தர வேண்டும்.
இது இப்படியே தொடர்ந்தால், முதலில் பிடித்துத் தந்த முகவருக்கும், அவர் மூலம் முகவர்கள் ஆனவர்களுக்கும்கவர்ச்சிகரமான கமிஷன் தொகை வந்து சேரும் என்று விளம்பரப்படுத்தப்பட்டதால் முகவர்கள் குவியத்தொடங்கினர்.
முதலில் சுமூகமாக வந்து கொண்டிருந்த கமிஷன் தொகை படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்து ஒரு கட்டத்தில்நின்றே போய் விட்டது.
இதுதவிர, பொருட்களை வாங்குவதற்கு பணம் கொடுத்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு பொருள்வந்து சேரவில்லை. இதையடுத்து அவர்களில் சிலர் போலீஸில் புகார் செய்தனர்.
இதையடுத்து மத்திய குற்றப் பிரிவு போலீஸார், ராயப்பேட்டையில் உள்ள இந்த நிறுவனத்தின் தலைமைஅலுவலகத்திற்கு விரைந்தனர்.
நிறுவனத்தின் தலைவர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிறுவன ஊழியர்கள் 84 பேரைக் கைது செய்தனர்.அவர்களில் பலர் டாக்டர்கள், என்ஜீனியர்கள், முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் விசாரணையின்போது, இந்த நிறுவனத்திற்கு 2,000 வாடிக்கையாளர்கள் வரை சேர்க்கப்பட்டுள்ளதாகவும்அவர்களிடமிருந்து தலா ரூ.1 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள காந்தப் படுக்கையை வெறும் ரூ.6,000க்குத் தருகிறோம் என்று மக்களிடம்கவர்ச்சிகரமான திட்டத்தை அந்நிறுவனம் கூறியுள்ளது. இப்படியே சுமார் 30 கோடி ரூபாய்க்கு மோசடிநடந்துள்ளதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் "ஜப்பான் லைப் இந்தியா" நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தை இன்று காலை போலீசார் சீல்வைத்துப் பூட்டினர். இந்நிறுவனத்தின் தலைவரைப் பிடிப்பதற்காக தனிப் போலீஸ் படையினர் மும்பைவிரைந்துள்ளனர்.
பொதுமக்களின் பணத்தை மோசடி செய்ததாக ஒரு நிறுவனமே கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளதுசென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல பல நிறுவனங்கள் தொடர்ந்து சென்னையில் இயங்கி வருகின்றன. இவற்றில் மும்பையைச் சேர்ந்த சிலநிறுவனங்களும் அடங்கும். அவையும் இதே பாணியில்தான் மார்க்கெட்டிங் செய்து வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->


