சாத்தான்குளம் இடைத் தேர்தல்: பா.ஜ.க. இன்று இறுதி முடிவு
திருச்சி:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தனது இறுதி முடிவை பாரதீய ஜனதாக் கட்சிஇன்று அறிவிக்கவுள்ளது.
திருச்சியில் பாரதீய ஜனதாக் கட்சியின் மாநில அளவிலான பயிற்சிக் கூட்டம் நடந்து வருகிறது. 4வது மற்றும் இறுதிநாளான இன்றைய கூட்டத்தின் முடிவில் கட்சியின் உயர் மட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது.
அகில இந்தியத் தலைவர் வெங்கய்யா நாயுடு இதற்குத் தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் சாத்தான்குளம்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
கூட்டத்தில் இல. கணேசன், கிருபாநிதி, எச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்துகொள்கின்றனர்.
இதற்கிடையே, சாத்தான்குளத்தில் திமுக போட்டியிடாதது ஏன் என்று விவாதிக்க விரும்பவில்லை என்றுவெங்கய்யா நாயுடு கூறியுள்ளார். திருச்சி செல்வதற்காக சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நான் திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்காக சென்னை வரவில்லை. திருச்சி செல்லவே வந்துள்ளேன்.
சாத்தான்குளம் தேர்தல் தொடர்பாக கருணாநிதியை சந்திக்கும் எண்ணம் எதுவும் இல்லை. அவர்கள் ஏன்போட்டியிடவில்லை என்று விவாதிக்க எங்களுக்கு நேரம் இல்லை என்றார்.
-->


