திமுகவின் மாஸ்டர் பிளான்: அதிமுக, பா.ஜ.கவுக்கு பாடம் புகட்ட திட்டம்
சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் திமுக போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டது காங்கிரசுக்கு ஆதரவாகத் தான் என திமுகவின் தூத்துக்குடிமாவட்டத் தலைவர்களும் சாத்தான்குளம் தொகுதியின் திமுக தொண்டர்களும் கூறுகின்றனர்.
இந்த முடிவு பா.ஜ.கவுக்கு ஆதரவானது போலத் தெரிந்தாலும் இது காங்கிரசுக்கு ஆதரவாக எடுக்ரப்பட்ட முடிவு என்கின்றனர்திமுகவினர்.
சாத்தான்குளத்தில் காங்கிரசுக்கு வலுவான வாக்குகள் உள்ளதால் அந்தக் கட்சியை வெற்றி பெறச் செய்யும் வகையில்ஓட்டுக்களைப் பிரிக்கும் வேலையில் நாம் இறங்க வேண்டாம் என தங்களுக்கு தலைமையிடம் இருந்து தகவல் வந்ததாக அம்மாவட்ட திமுகவினர் கூறுகின்றனர்.
தமிழகத்தில் அதிமுகவை சமாளிக்கும் அளவுக்கு காங்கிரஸ் பெரிய கட்சி இல்லை என்றாலும் சாத்தான்குளத்தின் நிலை வேறு.அங்கு பாரம்பரியமாகவே காங்கிரசுக்கு ஓட்டு போடுவது வழக்கமாக உள்ளது.
மேலும் கிருஸ்துவ நாடார்கள் இத் தொகுதியில் அதிகம். சமீபத்தில் மத மாற்றத் தடைச் சட்டம் கொணடு வந்த அதிமுக மீதுஇவர்கள் வெறுப்பில் உள்ளனர். இதனால் இவர்களது ஓட்டுக்கள் ஒட்டுமொத்தமாக அதிமுகவுக்கு எதிராக விழும். இந் நிலையில்திமுக போட்டியிட்டால் இந்த ஓட்டுக்கள் காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு சிதறும்.
இது அதிமுகவுக்கு ஆதாயமாக முடியும். எனவே, தேர்தலில் போட்டியிடாமல் அமைதியாய் இருந்து அதிமுகவுக்குப் பாடம்புகட்டவும், பா.ஜ.கவை கழுத்தறுக்கவும் திமுக முடிவு செய்துள்ளதாக அம் மாவட்ட திமுக தலைவர்களும் தொண்டர்களும்தெரிவிக்கின்றனர்.
கிருஸ்துவ மதத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஒட்டுமொத்த இந்து மத வாக்காளர்களின் வாக்குகளை அள்ளலாம் எனபா.ஜ.க. நினைக்கிறது. இங்கு பா.ஜ.கவுக்கு டெபாசிட் கிடைப்பதே கஷ்டம் என்கின்றனர் திமுகவினர்.
மேலும் இத் தொகுதியில் திமுகவைவிட காங்கிரஸ் ஒரு படி மேலே தான் உள்ளது. இதை நாங்கள் நன்றாகவே உணர்ந்துள்ளோம்.தினகரன் பத்திரிக்கை நிறுவனரும் திமுகவின் மிக முக்கிய புள்ளிகளில் ஒருவருமாக இருந்த நாடார் சமூகத்தைச் சேர்ந்த கே.பி.கந்தசாமி மட்டுமே இங்கு வென்ற ஒரே திமுக தலைவராவார். மற்றபடி காங்கிரஸ் தான் தொடர்ந்து வென்றுள்ளது.
திமுக வழக்கமாக 25 முதல் 30 சதவீத வாக்குகளை இங்கு அள்ளினாலும், வென்றது இல்லை. இம் முறை அதிமுகவுக்கு எதிராககாங்கிரஸ் போட்டியிடும் நிலையில் திமுக போட்டியிட்டால் அது காங்கிரசுக்குத் தான் பலவீனமாக அமையும். இதனால் தான்இங்கு போட்டியிடுவதில்லை என்று முன்பே எங்களுக்கு சிக்னல் வந்துவிட்டது.
ஆனால், அதிமுகவை குழப்பத்தில் வைக்கவே சுவர்களை ரிசர்வ் செய்யுமாறு உத்தரவு வந்தது என்கின்றனர் இந்தத் தொகுதியின்திமுகவினர்.
அதே போல வாணியம்பாடியில் நடுநிலை என்று கூறி திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தது பா.ஜ.க. இங்கு அதே ஸ்டைலைநாங்கள் பின்பற்றப் போகிறோம். தேர்தலில் போட்டியில்லை என்றாலும் அதிமுக மற்றும் பா.ஜ.கவுக்கு எதிரான வாக்குகளைகாங்கிரசுக்கு ஆதரவாகத் திரட்டுவதில் திமுக தொண்டர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்கிறார் அண்ணா அறிவாலயத்தின்முக்கியத் தலைவர் ஒருவர்.
இதன்மூலம் பா.ஜ.கவுக்கும் ஒரு மெசேஜ் சொல்வோம். நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ அதே போல நாங்களும் நடந்துகொள்வோம் என்பது தான் அது. வாஜ்பாயின் தூதராக வந்த கோயல் மாநில பா.ஜ.க. தலைவர்களை அடக்கி வைப்பதாகவும்சாத்தான்குளத்தில் எங்களை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டது உண்மை தான்.
ஆனால், முதலில் அடக்குங்கள். அப்புறம் பார்க்கலாம் என்று கூறிவிட்டோம். இப்போது சாத்தான்குளத்தில் போட்டியிடாமல்ஒதுங்கிக் கொண்டதால் பா.ஜ.கவை நாங்கள் நேரடியாக எதிர்க்கவில்லை என்பதையும் டெல்லிக்கு சுட்டிக் காட்டிவிட்டோம்.
காங்கிரசுக்கு ஆதரவில்லை என்று கருணாநிதி கூறியதும் பா.ஜ.கவுக்கு பதில் தரத் தான். அவர்கள் தான் திமுகவுடன் கூட்டணி,அதிமுகவுடன் நட்பு என்று தங்கள் வசதிக்குப் பேசுகின்றனர். அதே மாதிரித் தான் இதுவும். காங்கிரசுக்கு ஆதரவு என்று சொல்லமாட்டோம். ஆனால், பா.ஜ.கவையும் ஆதரிக்க மாட்டோம்.
தேர்தலில் இருந்து ஒதுங்கி இருப்பதன் மூலம் அதிமுகவுக்கும் பாடம் புகட்டப் போகிறோம். இதில் பா.ஜ.கவுக்கும் சில பாடங்கள்கிடைக்கும் என்கின்றனர் சாத்தான்குளம் திமுகவினர்.
ஆனால், நடக்காததை நடக்கச் செய்வது ஜெயலலிதா ஸ்டைல் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர்தான் வாணியம்பாடியில் வெல்ல முடியும் என்று நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இருந்து வந்த ஒரு நம்பிக்கையை தனதுகட்சியின் மாற்று மத வேட்பாளர் மூலம் தகர்த்தது அதிமுக.
ஆக, தான் ஒரு ராஜ தந்திரி என்பதை தனது முடிவு மூலம் கருணாநிதி மீண்டும் நிரூபிப்பாரா, அல்லது எப்பாடுபட்டாவது(போலீஸ், கள்ள ஓட்டு, குண்டர்கள், லட்டுவுக்குள் மூக்குத்தி தந்து ஓட்டு வாங்குவது உள்பட) இங்கும் வென்று தனது பலததைஜெயலலிதா மீண்டும் ஒருமுறை நிரூபிப்பாரா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
-->


