சாத்தான்குளம் இடைத் தேர்தல்: மதிமுகவும் புறக்கணிக்க முடிவு
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று திமுக அறிவித்துள்ள நிலையில் மதிமுகவும்இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மதிமுக அவைத் தலைவரான எல். கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 18ம் தேதி மதிமுக பொதுச் செயலாளரான வைகோவை வேலூர் சிறைக்குச் சென்று மத்திய அமைச்சர்கண்ணப்பனும் நானும் சந்தித்து இடைத் தேர்தல் குறித்துப் பேசினோம்.
"இந்தத் தேர்தலில் மதிமுக போட்டியிடத் தேவையில்லை. ஆனாலும் திமுக எடுக்கும் முடிவை ஆராய்ந்துஅதற்கேற்றவாறு முடிவு எடுக்கலாம்" என்று அப்போது எங்களிடம் வைகோ தெரிவித்தார்.
வைகோ கைதை எதிர்த்து எங்கள் கட்சி நடத்திய ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தின் நகல்களை 22 மற்றும் 23ம்தேதிகளில் பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் அளிக்கவுள்ளோம். அதன் பின்னர் இடைத் தேர்தல் குறித்த இறுதிமுடிவை அறிவிப்போம் என்று கூறியுள்ளார் எல். கணேசன்.
திமுகவுடன் வெகு வேகமாக மதிமுக நெருங்கி வரும் சூழ்நிலையில், திமுகவின் முடிவுக்கு ஆதரவளிக்கும் விதத்தில்சாத்தான்குளம் தேர்தலைத் தாங்களும் புறக்கணிக்கப் போவதாக மதிமுக அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே திமுக எடுக்கும் எந்த முடிவையும் வைகோ தொடர்ந்து ஆதரித்து வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே வைகோவை வேலூர் மத்திய சிறையில் மதிமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், மத்தியநிதித் துறை இணை அமைச்சருமான செஞ்சி ராமச்சந்திரன் சந்தித்துப் பேசினார்.
சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. சந்திப்பின்போது பேசப்பட்ட விவரம் குறித்துத்தெரிவிக்கப்படவில்லை. வைகோவை சந்தித்து விட்டு வெளியே வந்த அமைச்சர், செய்தியாளர்களை சந்திக்கமறுத்து விட்டு தனது காரில் செஞ்சிக்குக் கிளம்பினார்.
-->


