சம்பா கருகியதால் ரயில் முன் பாய்ந்து விவசாயி தற்கொலை
நாகப்பட்டனம்:
நீரின்றி வாடிய பயிரைப் பார்த்து மனம் நொந்து மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஓடிக்கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.
நாகப்பட்டனம் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் உள்ள அம்மனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கணேசன்.
31 வயதான இவரது வயலில் தண்ணீரின்றி பயிர்கள் வாடிவிட்டன. பாளம், பாளமாக வெடித்துக் கிடக்கும்வயலைப் பார்த்து கண்ணீர் வடித்தார் கணேசன்.
பின்னர் சிக்கல் என்ற ஊரின் அருகே ஓடிக் கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் ஏற்கனவே வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டுத்தான்சென்றுள்ளார்.
அதன் பிறகுதான் கீழ்வேளூர் ரயில்வே கேட் அருகே அடையாளம் தெரியாத ஒருவர் இறந்து கிடப்பதாககணேசனின் குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்தது. அவர்கள் ஓடிச் சென்று விசாரிப்பதற்குள், போலீசார் அந்தப்பிணத்தைப் புதைத்து விட்டனர்.
புகைப்படம் மற்றும் உடைகளைப் பார்த்த பின்னர்தான் இறந்தது கணேசன் என்று அவர்களுடையகுடும்பத்தினருக்குத் தெரிய வந்தது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை மற்றும் மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.இதுவரை 6 பேர் இறந்துள்ளனர். வீரையன், சண்முகம் மற்றும் கணேசன் ஆகியோர் தற்கொலை செய்துகொண்டனர். பத்மாவதி, வேலுச்சாமி மற்றும் தமிழரசன் ஆகியோர் பயிர் கருகிய அதிர்ச்சியில் உயிரிழந்தனர்.
-->


