சிதம்பரம் மதிமுக பிரமுகர் கொலை வழக்கு: கைதான அனைவரும் விடுதலை
கரூர்:
சிதம்பரம் மதிமுக பிரமுகரான பழனிவேல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 21 பேரையும் விடுதலை செய்துகரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்களில் 2 பேர் ஏற்கனவே மரணமடைந்து விட்டனர். 2 பேர் இன்னும்தலைமறைவாக உள்ளனர்.
பழனிவேலுக்கும் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையாருக்கும் இடையே சிதம்பரம் பஸ்நிலையம் பகுதியில் சைக்கிள் ஸ்டாண் மற்றும் பொதுக் கழிப்பிடம் ஆகியவற்றை ஏலம் எடுப்பதில் தகராறு இருந்துவந்தது.
இந்நிலையில் கடந்த 1998ம் ஆண்டு பழனிவேலை ஏழு பேர் கொண்ட மர்மக் கும்பல் ஒன்று வெட்டிக் கொலைசெய்தது.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஸ்ரீதர் வாண்டையார்,அவருடைய சகோதரர் பிரேம்குமார் வாண்டையார் உள்ளிட்ட 21 பேரைக் கைது செய்தனர்.
இந்தக் கொலை தொடர்பான வழக்கு சிதம்பரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் சென்னை உயர் நீதிமன்றஉத்தரவுப் படி கரூர் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.
வழக்கு நிலுவையில் இருந்தபோதே குற்றம் சாட்டப்பட்டிருந்த பிரேம்குமார் வாண்டையாரும் பகலவன்என்பவரும் மரணமடைந்து விட்டனர். மேலும் வளன் மற்றும் அருள்தாஸ் ஆகிய இருவரும் போலீஸ்பிடியிலிருந்து தப்பி தலைமறைவாகிவிட்டனர்.
இந்நிலையில் இந்தக் கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் அனைத்தும் முடிந்து நேற்று தீர்ப்புவழங்கப்பட்டது. இதையொட்டி கரூர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்னிலையில் 17 குற்றவாளிகளும்ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிபதி தன் தீர்ப்பில், அரசு தரப்பில் வைக்கப்பட்ட சாட்சியங்கள் போதுமானதாக இல்லை என்பதால் இந்தக்கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.
-->


