நகை தொழிலாளர் குறித்த தமிழ் குறும்படத்திற்கு சர்வதேச விருது
நகை தொழிலாளர்களின் வாழ்க்கை முறையைச் சித்தரித்து உருவாக்கப்பட்ட "பொன் வண்ணம்" என்ற தமிழ்குறும்படத்திற்கு பிரான்சில் நடந்த உலகத் திரைப்பட விழாவில் "சர்வதேச பார்வையாளர் விருது" கிடைத்துள்ளது.
சேலம் ஹோலி கிராஸ் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வரும் கார்த்திகேயன் இந்தப் படத்தைஇயக்கியுள்ளார். முழுக்க முழுக்க சேலம் நகரிலேயே இந்தப் படத்தை எடுத்துள்ளார். சேலம் நகர நகைத்தொழிலாளிகளின் நிலை தான் கதைக் கரு.
கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளைச் செய்யும் தொழிலில் இருந்தாலும் இந்தத் தொழிலாளர்கள் வாழ்வில்தங்கப் புன்னகை இல்லை.
இலக்கியம் மீது தீவிர ரசனை கொண்ட கார்த்திகேயன் ஒரு இலக்கியக் குறும்படத்தைத் தயாரிக்க முடிவுசெய்திருந்தார். ஆனால், தன்னைச் சுற்று வாழ்ந்து வரும் தங்க நகை தொழிலாளர்களின் அவல நிலையைக் கண்டஅவர் முதலில் அது குறித்துப் படம் பிடித்தார்.
"வேட்டை திரைப்பட அமைப்பு" என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் இக் குறும்படத்தை எடுத்துள்ளார்.
தங்க நகைத் தொழிலாளர் குடும்பங்களில் தாண்டவமாடும் வறுமையை சாதாரண வீடியோ காமிராவிலேயே படம்பிடித்தார். வீடியோகிராபர் தாஸ் இதற்கு உதவினார்.
இந்தக் குறும்படத்திற்கு "பொன் வண்ணம்" என்று பெயரிட்ட கார்த்திகேயன், இந்தப் படத்திற்கான பின்னணிஇசை, டப்பிங், எடிட்டிங் ஆகிய அனைத்தையும் சேலத்திலேயே முடித்து விட்டார். மொத்தம் 20 நிமிடங்களுக்குஇந்தக் குறும்படம் ஓடுகிறது.
"பொன் வண்ணம்" படத்தை பிரான்ஸ் திரைப்பட விழாவுக்கு நம்பிக்கை இல்லாமல் தான் கார்த்திகேயன் அனுப்பிவைத்தார். அங்கு யாரும் எதிர்பார்த்திராத வகையில் இப் படத்திற்கு சிறந்த சர்வதேச பார்வையாளர் விருதுகிடைத்துள்ளது.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications