For Daily Alerts
Just In
பாண்டிச்சேரி தமிழறிஞருக்கு திருவள்ளுவர் மன்ற விருது
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர் அரிமதி தென்னகனுக்கு திருவள்ளுவர் மன்ற இலக்கிய விருது வழங்கப்பட உள்ளது.
ஆண்டுதோறும் இந்த மன்றத்தின் சார்பில் சிறந்த கவிதை, கட்டுரை, சிறுகதைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றனர்.இதற்காக ஆண்டுதோறும் போட்டியும் நடத்துகிறது இந்த அமைப்பு.
இதில் வள்ளுவம் காட்டும் வள்ளுவர் என்ற தலைப்பில் புதுவை அரிமதி தென்னகன் எழுதிய ஆய்வுக் கட்டுரை சிறந்தநூலுக்கான விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 112 நூல்களை எழுதியுள்ளார் தென்னகன்.
மத்திய அரசின் சிறுவர் இலக்கிய விருது, தமிழக அரசின் பாவேந்தர் விருது ஆகியவை உள்பட 25 விருதுகளை வென்றுள்ளார்.
ராஜபாளையத்தில் நடக்கவுள்ள விழாவில் குன்றக்குடி அடிகளார் இவருக்கு திருவள்ளுவர் மன்ற இலக்கிய விருதை வழங்கஉள்ளார்.
-->


