தனியார் மருத்துவமனையில் சிகிச்சை: அல்- உம்மா அன்சாரிக்கு அனுமதி
கோவை:
அல்-உம்மா தலைவர்முகம்மது அன்சாரியை அரசு மருத்துவமனையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு இடம்மாற்ற சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கோவை வெடிகுண்டு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் அன்சாரி. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால்கடந்த ஜனவரி30ம் தேதியும், பின்னர் பிப்ரவரி 5ம் தேதியும் கோவை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந் நிலையில் அன்சாரிக்கு சில மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டியுள்ளதாகவும், அந்த வசதிகள் அரசுமருத்துவமனையில் இல்லை என்பதாலும் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கவேண்டும் என்று கோரி அன்சாரி சார்பில் தனி நீதிமன்ற நீதிபதி சிவக்குமாரிடம் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த நீதிபதி சிவக்குமார் அன்சாரியை தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கஅனுமதித்தார். சிறைக் கண்காணிப்பாளர், அன்சாரியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்றும்மருத்துவ சிகிச்சைமுடியும்வரைஅன்சாரியின் மனைவி சம்சுனிசா அவருடன் இருக்கலாம் என்றும் நீதிபதி தனதுஉத்தரவில் தெரிவித்துள்ளார்.


