For Daily Alerts
Just In
தர்மபுரியில் ஈருடல், ஒரு இதயத்துடன் பிறந்த குழந்தை
தர்மபுரி:
தர்மபுரி மருத்துவமனையில் இரண்டு உடல்கள் மற்றும் ஒரு இதயத்துடன் பிறந்த ஒரு குழந்தை அடுத்த கால் மணிநேரத்திலேயே இறந்து விட்டது.
தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று இந்தக் குழந்தை பிறந்தது.
ஆனால் இரண்டு உடல்களும் ஒட்டிய நிலையில் ஒரே இதயத்துடன் பிறந்ததால், பிறந்த கால் மணி நேரத்திலேயேஅது இறந்து விட்டதாக டாக்டர் கூறினார்.
இது குறித்து அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர் தங்கம் ராமசெந்தில் கூறுகையில்,
இது போன்ற குழந்தை பிறப்பது மிகவும் அரிது. சுமார் 60,000 குழந்தைகளில் ஒன்றுதான் இப்படிப் பிறக்கிறது.
இந்தக் குழந்தைகள் உயிர் பிழைப்பது கடினம். பிறந்தவுடன் இவை இறந்து விடும்.
இரண்டு இதயங்கள் இருந்திருந்தால் இவை உயிர் பிழைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒரு இதயத்துடன்பிறந்ததால் இந்தக் குழந்தை இறந்துவிட்டது என்றார் அந்த டாக்டர்.


