For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அயோத்தி: நிலத்தை வி.எச்.பியிடம் தர கருணாநிதி கடும் எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்டு, இப்போது உச்ச நீதிமன்றத்தின்விசாரணையில் இருக்கும் அயோத்தி நிலத்தை விஸ்வ ஹிந்து பரிஷத்திடம் தரும் பா.ஜ.க. அரசின் முயற்சிக்கு திமுககடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

விரைவில் நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அயோத்தி விவகாரத்தை விஸ்வஹிந்து பரிஷத்தும், பா.ஜ.கவும் கிளப்ப ஆரம்பித்துள்ளன.

இதையடுத்து அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றியுள்ள (அதாவதுசர்ச்சைக்கு அப்பாற்பட்ட) 67.7 ஏக்கர் நிலத்தை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல்செய்துள்ளது.

இந்த நிலத்தை விடுவித்து ராமஜென்ம பூமி அறக்கட்டளையிடம் வழங்க மத்தியில் உள்ள பா.ஜ.க. தலைமையிலானதேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் டெல்லி சென்ற காஞ்சிசங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமியும் பிரதமர் வாஜ்பாயுடன் விவாதித்துள்ளார்.

இதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் எதிர்ப்புதெரிவித்துள்ளன. சர்ச்சைக்குரிய நிலத்தைச் சுற்றியுள்ள இந்த இடத்தில் எந்த மத வழிபாடும் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் இந்த நிலத்தை விடுவித்து வி.எச்.பியிடம் தந்தால் சர்ச்சைக்குரியநிலத்தையும் அவர்கள் ஆக்கிரமிப்பார்கள் என்று அக் கட்சிகள் கூறியுள்ளன.

நீதிமன்றம் விசாரித்து வரும் ஒரு வழக்கில் மத்திய அரசு எதற்காக ஒரு பிரிவினருக்கு ஆதரவாக இறங்கவேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரசத்தில் மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.சென்னையில் அவர் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,

அயோத்தி நில விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே தொடர்ந்து நீடிக்க வேண்டும். அதில் சிறிதளவு மாறினாலும்புதிய பிரச்சனைகள் முளைத்து விடும்.

இந்தப் புதிய பிரச்சனைகளை பிரதமர் வாஜ்பாய் உருவாக்கிவிடக் கூடாது. பிரச்சனை உருவாகும் அளவுக்கு அவர்நடந்து கொள்ள மாட்டார் என்றே நம்புகிறேன். நிலத்தை விடுவித்து வி.எச்.பியிடம் தரும் முயற்சியை திமுகஎதிர்க்கும் என்றார் கருணாநிதி.

பா.ஜ.க. கூட்டணியிலிருந்து கழன்று கொண்டிருக்கும் நிலையில் கருணாநிதி இவ்வாறு கூறியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

""பொய் சொல்வதே ஜெ. வழக்கம்"":

மேலும் கருணாநிதி பேசுகையில் ஜெயலலிதாவுக்கு பதிலடி தந்தார். தன்னுடைய குற்றங்களை மறைப்பதற்காகஅடுத்தவர் மீது குறை சொல்வதையே முதல்வர் ஜெயலலிதா வழக்கமாகக் கொண்டுள்ளார் என்று கருணாநிதிகூறினார்.

எம்.ஜி.ஆர். குறித்து ராஜிவ் காந்திக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் குறித்தும், விடுதலைப்புலிகளை ஆதரித்ததுகுறித்தும் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.

இன்று நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, புலிகளை முதலில் ஆதரித்தாக ஜெயலலிதா ஒப்புக் கொண்டதற்குஎன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் எம்.ஜி.ஆர். குறித்து ராஜிவுக்கு தன் கைப்படவே ஜெயலலிதா எழுதிய கடிதத்தை நான்தான் போலியாகதயார் செய்து வெளியிட்டதாக ஜெயலலிதா கூறுகிறார். இந்தக் கடிதம் "தி ஹிந்து" மற்றும் "இந்தியன் எக்ஸ்பிரஸ்"ஆகிய பத்திரிக்கைகளில் கடந்த 1989ல் வெளியாகியுள்ளது (அந்தப் பத்திரிக்கை செய்திகளையும் நிருபர்களிடம்காண்பித்தார் கருணாநிதி).

நான் போலிக் கடிதத்தை வெளியிட்டதாகக் கூறும் அவர், கடந்த 13 ஆண்டுகளாக ஏன் இது குறித்து பேசாமல்இருந்தார். அப்போதே ஏன் இந்தச் செய்தியை மறுக்கவில்லை. அது போலிக் கடிதம் என்றால் அப்போதே ஏன் என்மீது வழக்குப் போடவில்லை.

அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை வாங்கியதாக கடந்த 1992ல் ஒப்புக் கொண்டார். ஆனால் நீதிமன்றத்தில்அதற்கான படிவத்தில் தான் கையெழுத்தே போடவில்லை என்றும், யாரோ தன்னுடைய கையெழுத்தைப்போட்டுள்ளனர் என்றும் கூறினார்.

கடந்த 1989ம் ஆண்டு நான் முதல்வராக இருந்தபோது சட்டசபையில் அதிமுகவினர் பயங்கரமான அராஜகத்தில்இறங்கினர். என் முகத்தில் குத்தினார்கள். என் கண்ணாடி கழன்று விழுந்தது. முதல்வராக இருந்தபோதே என் மீதுவன்முறையைத் தூண்டிய அதிமுகவினர், தற்போது நான் எதிர்க் கட்சித் தலைவராக சட்டசபையில் அமர்ந்தால்வன்முறையில் ஈடுபடாமல் இருப்பார்களா? அதற்காகத்தான் நான் சட்டசபைக்கு வரவில்லை.

மேலும் கடந்த 1972 முதல் 1976 வரை எம்.எல்.ஏவாக இருந்தும் எம்.ஜி.ஆர். சட்டசபை கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. அவ்வளவு ஏன், ஜெயலலிதாவே கூட 1989 முதல் 1991 வரை சட்டசபையை புறக்கணித்தாரே.அது ஏன் என்று கேட்டார் கருணாநிதி.

தூத்துக்குடி திமுகவில் குழப்பம்:

இதற்கிடையே சாத்தான்குளம் தேர்தலை வைத்து தூத்துக்குடி மாவட்ட திமுகவில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

இங்கு திமுக தலைமையின் அனுமதி பெறாமலேயே தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பெரியசாமி திடீரென செயல் வீரர்கள் கூட்டத்தைக் கூட்டினார். இக்கூட்டத்தில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட இருந்தது. இதையடுத்து கருணாநிதியே தலையிட்டு இக் கூட்டத்தை ரத்து செய்யஉத்தரவிட்டுள்ளார். யாரையும் ஆதரிக்க வேண்டாம் என்றும் அறிவித்துள்ளார்.

சாத்தான்குளம் தொகுதியில் திமுகவினரையும் அதிமுகவினர் மடக்கிப் போட்டு வருவதாக தகவல்கள் வரும் நிலையில் தன்னைக் கேட்காமல் பெரியசாமிகூட்டம் போட்டது கருணாநிதியை எரிச்சலாக்கியுள்ளது. உடனே சென்னை வருமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அவர் இன்னும்வரவில்லை.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X