ஓய்வூதியம் குறைப்பா?- மதுரை பல்கலை. ஆசிரியர்கள் கண்டனம்
மதுரை:
அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் குறைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு மதுரை காமராஜர்பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நிதி நிர்வாகத்தை மேம்படுத்தும் பொருட்டு, இந்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக அரசு அரசுஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58லிருந்து 56ஆகக் குறைத்து, அவர்களின் ஓய்வூதியத்தையும் குறைக்கத்திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த முடிவுக்கு மதுரை பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கம் கண்டனம்தெரிவித்துள்ளது. இந்தச் சங்கத்தின் தலைவர் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தச் செய்தி உண்மையா, இல்லையா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த அறிவிப்பு உண்மையாக இருந்தால், அது ஆசிரியர்களைக் கடுமையாகப் பாதிக்கும். சலுகைகள்அத்தனையையும் பறித்துக் கொண்டால், அவர்களின் போதிக்கும் மனநிலை பாதிக்கப்படும். இதனால்மாணவர்களுக்குத்தான் நஷ்டம்.
ஆசிரியர்கள் தொடர்பான எந்த முடிவையும் அரசு மிகவும் நிதானத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்றுஅவ்வறிக்கையில் கூறியுள்ளார் சந்திரன்.


