For Daily Alerts
Just In
ஜெவை அவதூறாக பேசியதாக மதிமுக தலைவர்கள் மீது வழக்கு
வேலூர்:
மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், மகளிர் அணித் தலைவி விஜயா தாயன்பன் மற்றும் மாதையன் ஆகியோர்மீது முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக போலீஸார் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 15ம் தேதி வேலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப்பேசியதாக இந்த மூவர் மீதும் வேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக வேலூர்முதன்மைசெஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசு வக்கீல் கே.பாலச்சந்தர் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த மூவரும் வரும் மார்ச் 24ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஆறுமுகச்சாமிஉத்தரவிட்டார்.


