நக்கீரன் நிருபருக்கு ஜாமீன் கிடைக்குமா?
கோவை:
கோவையில் கைதான நக்கீரன் நிருபர் மகரன் என்ற கிருஷ்ணகுமாருக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான மனு மீதுபிப்ரவரி 25ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மாவட்ட முதலாவது செஷன்ஸ் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கோவையைச் சேர்ந்த மாணவர் பக்தவச்சலம் கடந்த 1998ம் ஆண்டு வீரப்பன் பதுங்கி இருந்த சத்தியமங்கலம்காட்டில் பிணமாகக் கிடந்தார்.
இவர் தன்னை பி.பி.சி. நிருபர் என்று கூறிக் கொண்டு காட்டுக்குள் சென்றார். வீரப்பன் இருக்கும் இடைத்தைஅதிரடிப்படையினருக்குக் காட்டித் தரவே இவர் சென்றதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த வீரப்பன்பக்தவச்சத்தை கொடுமைப்படுத்திக் கொன்றான்.
இந்தக் கொலை வழக்கில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரே கெளடர், தமிழநாடு மீட்சிப் படைத் தலைவர்சத்தியமூர்த்தி ஆகியோர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.
இவர்கள் தவிர திடீரென நக்கீரன் ஆசிரியர் கோபால், நிருபர்கள் சிவசுப்ரமணியம், மகரன், கரீம் பாட்சாஆகியோரையும் இந்தக் கொலையில் தொடர்புபடுத்தி சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே சிவசுப்ரமணியம் கைது செய்யப்பட்டு விட்டார். ஒரு மாதத்திற்கு முன் மகரனைபோலீசார் கைது செய்தனர். கோபாலையும் கைது செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந் நிலையில் தன்னை ஜாமீனில் விடக்கோரி மகரன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதுநேற்று விசாரணை நடந்தது. ஜாமீன் கொடுப்பது குறித்து 25ம் தேதி இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று நீதிபதிஅறிவித்தார்.


