தர்மபுரி காடுகளில் பிடிபட்ட 26 நக்சல்கள் இன்று பொடா நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னை:
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தர்மபுரி காட்டுப் பகுதிகளில் போலீசாரிடம் பிடிபட்ட 5 பெண்கள்உள்ளிட்ட 26 நக்சலைட்டுகள் இன்று பொடா தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
தர்மபுரி அருகே உள்ள காடுகளில் துப்பாக்கிகளுடன் திரிந்து கொண்டிருந்த 28 நக்சலைட்டுகளைப்போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே பயங்கரமான துப்பாக்கிச் சண்டையும் நடந்தது. இதில்சிவா என்ற பார்த்திபன் என்ற நக்சலைட் போலீசார் சுட்டதில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துஉயிரிழந்தார்.
இதன் பின்னர் ஐந்து பெண் நக்சலைட்டுகள் உள்ளிட்ட 27 நக்சலைட்டுகளைப் போலீசார் துப்பாக்கிமுனையில் கைது செய்தனர். அனைவரும் பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஊத்தங்கரை நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கு, பின்னர்சென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதற்கு முன்பாகவேமுருகேசன் என்ற நக்சலைட் ஜாமீன் பெற்று விடுதலையாகி சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி மீதமுள்ள 26 நக்சலைட்டுகளும் பொடா நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 20ம் தேதி வரை சேலம் சிறையிலேயே வைக்க நீதிபதிராஜேந்திரன் உத்தரவிட்டார்.
இன்றுடன் அவர்களுடைய சிறைக் காவல் முடிவடையும் நிலையில் மீண்டும் 26 நக்சலைட்டுகளும்பொடா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகின்றனர். இதையடுத்து அவர்கள் அனைவரும்இன்று சேலம் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்படுகின்றனர்.


