பிரிவை விரும்பாத 2 நெருங்கிய தோழிகள் தற்கொலை
சென்னை:
கல்யாணம் செய்து கொண்டால் பிரிய நேரிடுமே என்ற பயத்தால் 2 இணை பிரியா தோழிகள்சென்னையில் தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னை குரோம்பேட்டை காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்திரா மற்றும் டில்லியம்மாள்.இருவருக்கும் 18 வயது ஆகிறது. பிளஸ் டூ வரை படித்துள்ளார்கள். படிப்புக்குப் பின் இருவரும்சேர்ந்து ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
டில்லியம்மாளும், இந்திராவும் இணை பிரியா தோழிகள். எதுவாக இருந்தாலும் சேர்ந்தேசெய்வார்கள். எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வார்கள்.
இருவருக்கும் இடையே எந்த ரகசியமும் இருந்ததில்லை. இருவரின் ஒற்றுமையையும் பார்த்துஅவர்களுடைய குடும்பத்தினரும் பெருமையுடன் இருந்து வந்தனர்.
இந்நிலையில் திருமண வயது நெருங்கி விட்டதால் இருவருக்கும் கல்யாணம் செய்வதற்காகமாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர் அவர்களுடைய பெற்றோர். இதையடுத்து டில்லியம்மாளும்இந்திராவும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
கல்யாணம் ஆகிவிட்டால் தங்களைத் தனித் தனியாகப் பிரித்து விடுவார்களே என்று அந்தத்தோழிகள் இருவரும் கவலைப்பட்டனர். அந்தப் பிரிவை இருவரும் சிறிதும் விரும்பவில்லை.வாழ்ந்தால் சேர்ந்து வாழ்வோம். இல்லாவிட்டால் செத்து விடுவோம் என்ற விபரீத முடிவுக்குவந்தனர்.
இதையடுத்து இருவரும் குரோம்பேட்டைக்கும் பல்லாவரத்திற்கும் இடையே உள்ள ரயில்வே கேட்பகுதிக்கு வந்தனர். அங்கு தாம்பரத்திலிருந்து பீச் நோக்கி வந்த மின்சார ரயில் முன்பாக இருவரும்பாய்ந்தனர். சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி டில்லியம்மாளும் இந்திராவும் பரிதாபமாகஇறந்தனர்.
இருவரும் தங்களுடன் ஒரு கடிதத்தையும் எழுதி எடுத்து வந்திருந்தனர். அதை போலீஸார்கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையே இரு தோழிகளும் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்தபோது,ரயில் மோதி இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


