For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈராக்கை தாக்க 2வது தீர்மானம்: அமெரிக்கா தாக்கல்

By Staff
Google Oneindia Tamil News

ஐ.நா. சபை:

ஈராக்கைத் தாக்க அனுமதிக்கக் கோரி அமரிக்காவின் சார்பில் ஐ.நா. சபையில் இன்று பிரிட்டன், ஸ்பெயின் ஆகியநாடுகள் இரண்டாவது தீர்மானத்தை தாக்கல் செய்தன.

இந் நிலையில் இதற்குப் போட்டியாக ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் இணைந்து வேறறொருதீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன.

இதற்கிடையே, ஐ.நா. ஆயுதக் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி தன்னிடமுள்ள 200 கி.மீ. தொலைவு சென்றுதாக்கும் ஏவுகணைகளை அழிக்க முடியாது என ஈராக் கூறியுள்ளது.

பிரான்ஸ் போட்டித் தீர்மானம்:

ஐ.நாவில் கொண்டு வரப்பட்ட அமெரிக்க- பிரிட்டனின் முதல் தீர்மானம் பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, ரஷ்யாவின்எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந் நிலையில் இரண்டாவது தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்குப் போட்டியாக ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை ஐ.நா. பாதுகாப்புக் கவுனிசில் தாக்கல் செய்துள்ளதீர்மானத்தில், ஐ.நாவின் உத்தரவுகளை நிறைவேற்ற ஈராக்குக்கு கூடுதல் கால அவகாசம் தர வேண்டும் என்றும்,படிப்படியாகவே இந்த உத்தரவுகளை ஈராக்கால் நிறைவேற்ற முடியும் என்றும் அதுவரை ஈராக்கை தாக்க வேண்டியஅவசியம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த இரு தீர்மானங்கள் மீதான விவாதம் விரைவில் நடக்க உள்ளது.

அமெரிக்கா தொடர்ந்து முரண்டு பிடித்தால் தனது வீடோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அந் நாட்டின் தீர்மானத்தைரத்து செய்துவிட பிரான்ஸ் தீவிரமாக உள்ளது. ரஷ்யா, சீனாவும் பிரான்சுக்கு அதற்கு தர உள்ளன. தன்னிடம்வீடோ அதிகாரம் இல்லாவிட்டாலும் இப்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக உள்ள ஜெர்மனியும்அமெரிக்காவுக்குப் பாடம் புகட்ட தயாராகிவிட்டது.

தனது தீர்மானத்தை பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகியவை சேர்ந்து ரத்து செய்தால் போட்டிக்கு தனது வீடோஅதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நாடுகள் கொண்டு வரும் ஈராக் ஆதரவு தீர்மானத்தை அமெரிக்கா ரத்துசெய்யலாம் என்று தெரிகிறது.

சிக்கிக் கொண்ட ஆப்பிரிக்க நாடுகள்:

இப்போது பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளில் 11 நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக உள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், பல்கேரியா ஆகிய நாடுகள் ஓரணியில் உள்ளன.

பிரான்ஸ் தலைமையில் ஜெர்மனி, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் உள்ளன. கவுன்சிலில் உள்ள ஏனை ஆப்பிரிக்கநாடுகள் இரு அணிகளுக்கும் இடையே மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி நிற்கின்றன.

பாதுகாப்புக் கவுன்சிலில் உள்ள அங்கோலா, கினியா, கேமரூன் ஆகிய இந்த நாடுகளின் ஆதரவைத் திரட்டும்வேலையில் இரு அணிகளும் முயன்று வருகின்றன. இந்த நாடுகளுக்கு நிறைய நிதியுதவிகள் செய்வதாகஅமெரிக்கா கூறி வருகிறது. போட்டிக்கு பிரான்சும் நிதியுதவி செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.

முழி பிதுங்கும் பாகிஸ்தான்:

இதில் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வரும் இன்னொரு பாதுகாப்பு சபை நாடு பாகிஸ்தான்.அமெரிக்கா சொல்வதை தட்டவும் முடியாது. அதே நேரத்தில் ஈராக்குக்கு எதிராக போரை ஆதரித்தால்உள்நாட்டில் பெரும் குழப்பம் ஏற்படும் என்பதால் பாகிஸ்தான் என்ன நிலை எடுப்பது என்று தெரியாமல் உள்ளது.

இப்போதைக்கு பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இல்லை. இருந்திருந்தால் ரஷ்யாவை ஆதரிப்பதா இல்லைஅமெரிக்காவை ஆதரிப்பதா என்ற சிக்கல் நமக்கும் எழுந்திருக்கும்.

அமெரிக்காவுக்கு சதாம் சவால்:

இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில் ஐ.நா. ஆயுதக் கண்காணிப்புக் குழுவின் உத்தரவை ஏற்க முடியாது என ஈராக்மறுத்துள்ளது. ஏறகேனவே, இக் குழு சொன்ன அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம் இப்போது எங்களதுபாதுகாப்புக்கு உள்ள ஏவுகணைக் கூட அழிக்கச் சொல்வது நியாயமில்லாத செயல். எனவே, இக் குழுஉத்தரவிட்டதை ஏற்று அல்-சமத் ஏவுகணை அழிக்க மாட்டோம் என ஈராக் அதிபர் சதாம் ஹூசைன் கூறியுள்ளார்.

அமெரிக்க தொலைக்காட்சிக்கு சதாம் அளித்த பேட்டியில், ஜார்ஜ் புஷ் என்னுடன் தொலைக் காட்சியில் நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா என சவால் விட்டார்.

எங்களிடம் உள்ள ஏவுகணைகள் 150 கி.மீ. மட்டுமே செல்லும் திறன் கொண்டவை. இதையும் அழித்துவிட்டால்நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியதாகிவிடும். இதனால் அவற்றை அழிக்க முடியாது என சதாம் கூறியுள்ளார்.

சதாம் ஓடிவிடுவது நல்லது: அமெரிக்கா

சதாமின் இந்த மறுப்பு பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும் என்று தெரிகிறது.

சதாமுடன் விவாதம் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என வெள்ளை மாளிகை அதிகாரிகள் பதில்அளித்துள்ளனர். சதாம் நாட்டை விட்டு ஓடிவிடுவது தான் அவருக்கும் ஈராக்குக்கும் நல்லது என அமெரிக்கஅதிபரின் பாதுகாப்பு ஆலோசகர் கான்டலீஸ்ஸா ரைஸ் கூறியுள்ளார்.

போருக்கு இந்தியா மீண்டும் எதிர்ப்பு:

இதற்கிடையே ஐ.நாவின் அனுமதி இல்லாமல் ஈராக்கை அமெரிக்கா ஒருதலைப் பட்சமாகத் தாக்குவதை இந்தியாமீண்டும் எதிர்த்துள்ளது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நிருபர்களிடம் பேசிய பிரதமர் வாஜ்பாய், அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான செயலை ஆதரிக்க மாட்டோம். முதலில் தீவிரவாத விஷயத்தில் இரட்டை வேடம் போடுவதைஅமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிறுத்திக் கொள்வது நல்லது.

பாகிஸ்தானுக்கு ஏவுகணைகள் தந்த வட கொரியாவையும், வட கொரியாவுக்கு அணு ஆயுதங்கள் தந்தபாகிஸ்தானையும் விட்டுவிட்டு ஈராக்கை மட்டும் தாக்க வேண்டிய அவசியம் என்ன? முதலில் இந்த இரட்டைவேடம் ஒழிந்தால் தான் உலகுக்கு நல்லது என்றார் வாஜ்பாய்.

பெட்ரோலிய விலை கடும் உயர்வு:

ஈராக்கைத் தாக்க இரண்டாவது தீர்மானம் ஐ.நாவில் சமர்பிக்கப்பட்டதையடுத்து அமெரிக்கா உள்பட உலகம்முழுவதும் பெட்ரோலியத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. போர் ஏற்பட்டால் இது மேலும் உயரும்.

துருக்கியில் அமெரிக்க படைகள்:

இதற்கிடையே ஈராக்கைத் தாக்க தனது நாட்டில் அமெரிக்கப் படைகளை நிறுத்த துருக்கி அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது. அந் நாட்டில் அமெரிக்காவுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வரும் வேலையில் துருக்கி அரசு இந்தமுடிவெடுத்துள்ளது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X