For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியர்கள் வெளியேறுவதால் தள்ளாடும் பிஜி

By Staff
Google Oneindia Tamil News

சுவா:

பிஜி நாட்டில் தொடர்ந்து நடந்து வரும் இன வன்முறைகளிலிருந்து தப்பிப்பதற்காக அங்குள்ளஇந்திய வம்சாவளியினர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். பிஜி அரசாங்கத்தில் முக்கியபதவிகளில் உள்ள இந்தியர்கள் வெளியேறுவதால் அந்நாட்டின் பொருளாதாரம்பாதிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளிலும் இந்தியர்கள் தங்கள் திறமையால் அங்கு முக்கியப் பதவிகளை வகித்துவருகின்றனர்.

தெற்கு பசிபிக் கடலில் உள்ள பிஜி தீவிலும் ஏராளமான இந்திய வம்சாவளியினர் வசித்துவருகின்றனர். தங்களுடைய அறிவுத் திறமையாலும், முயற்சியாலும் அந்நாட்டில் உள்ள பலமுக்கியமான துறைகளிலும் அலுவலகங்களிலும் இந்தியர்கள் முக்கியப் பதவிகளை வகித்துவருகின்றனர்.

பிஜியில் மொத்தமுள்ள 8,20,000 பேரில் 52 சதவீதம் பேர்தான் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள். 44சதவீதம் பேர் ஆங்கிலேய ஆதிக்கத்தின்போது இந்தியாவிலிருந்து கரும்புத் தோட்ட ஊழியர்களாகபிஜிக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள்.

கடந்த 1987ம் ஆண்டிலிருந்தே இங்கு இனக் கலவரங்கள் நடந்து வருதைத் தொடர்ந்து சுமார்76,000 பேர் நாட்டை விட்டே வெளியேறி விட்டனர். இவர்களில் 89 சதவீதம் பேர் இந்தியவம்சாவளியினர்தான். இவர்களில் பெரும்பாலானவர்கள் டாக்டர்கள், என்ஜினியர்கள், வங்கிஅதிகாரிகள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கட்டடக் கலை வல்லுநர்கள்ஆவார்கள்.

இவர்களுக்கு மாற்றாக உருப்படியான உள்ளூர்க் காரர்கள் கிடைக்காமல் பிஜி நாட்டின்பொருளாதாரம் படிப்படியாகச் சரியத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் ரிசர்வ் வங்கிதெரிவித்துள்ளது. பிஜி அரசின் வருமானம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாகவும் அதுகூறியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இன வன்முறையாளர்கள் பிஜி நாட்டில் பெரும் கலகங்களைஏற்படுத்தி வருகின்றனர்.

கடந்த 2000ம் ஆண்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மகேந்திர செளத்ரி தலைமையிலான பிஜிஅரசை ஜார்ஜ் பைட் என்பவன் தலைமையிலான வன்முறைக் கும்பல் கவிழ்த்து, செளத்ரி உள்ளிட்டஏராளமான அரசு அதிகாரிகளை வீட்டுக் காவலில் வைத்தது என்பது நினைவுகூறத்தக்கது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X