வட கொரியா ஏவுகணை சோதனை: அமெரிக்கா டென்சன்
சியோல்:
வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில் வட கொரியாஏவுகணையைச் செலுத்தி சோதனை செய்துள்ளது.
கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகளை வைத்துள்ள வட கொரியாவுக்கும் அமெரிக்க ஆதரவு நாடானதென் கொரியாவுக்கும் இடையே எப்போதும் பதற்றம் நிலவியே வருகிறது.
தென் கொரியாவில் அமெரிக்கப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் சில நாட்களுக்குமுன் வட கொரியாவின் போர் விமானம் ஒன்று தென் கொரியாவுக்குள் வந்து பறந்துவிட்டுச் சென்றது.
இந் நிலையில் கப்பல்களைத் தாக்கும் ஏவுகணையை வட கொரியா இன்று ஏவியது. இதற்கு அமெரிக்கா கடும்எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
ஏவுகணைப் போரில் அமெரிக்காவை எங்களால் வெல்ல முடியும் என வட கொரியா கூறி வருகிறது. வடகொரியாவிடம் உள்ள ஏவுகணைகளால் அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளைத் தாக்க முடியும் சி.ஐ.ஏவும் ஒப்புக்கொண்டுள்ளது.
பாகிஸ்தான் உதவியுடன் வட கொரியா அணு ஆயுதங்களையும் தயாரித்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையே வட கொரியாவுக்கு மீண்டும் உணவு தானியங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கத் தயார் எனஅமெரிக்கா அறிவித்துள்ளது. அந் நாட்டுக்கு உணவு தானியம், பெட்ரோலியம் போன்றவற்றை வழங்கி வந்தஅமெரிக்கா திடீரென அதை நிறுத்தியது. இதையடுத்துத் தான் தனது வட கொரியா பிரச்சனை செய்யஆரம்பித்தது.
அணு ஆயுத சோதனைகளை நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த உதவிகளை அமெரிக்கா அளித்துவந்தது.


