For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொகாடியாவை கைது செய்க: முன்னாள் ராணுவ தளபதி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மதரீதியில் நாட்டைப் பிளக்க முயலும் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியாவை பொடாசட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளே தள்ள வேண்டும் என முன்னாள் இந்திய ராணுவத் தளபதியான ஜென்ரல்சங்கர்ராய் செளத்ரி கூறியுள்ளார்.

நியமன எம்.பியாக உள்ள செளத்ரி இன்று ராஜ்யசபாவில் பேசுகையில் நாட்டைப் பிளவுபடுத்தும் சக்திகள் குறித்துமிகுந்த வருத்தம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

நாட்டின் ஒற்றுமையைக் காக்க ஒரு பக்கம் ராணுவ வீரர்கள் உயிர் தந்து வருகிறார்கள. ஆனால், தொகாடியாபோன்ற ஆசாமிகள் மதரீதியில் நாட்டை பிளவுபடுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.

இவர்கள் ஏதோ தேசத் தலைவர்கள் மாதிரி அரசின் பாதுகாப்பு வேறு தரப்படுகிறது. தொகாடியா ஒரு ஹிட்லர்.இந்துத்துவாவை வைத்து நாட்டை உடைக்க முயலும் ஒரு நபர். இவரை ஏன் இன்னும் பொடா சட்டத்தில் கைதுசெய்யவில்லை என்று தெரியவில்லை.

இவரைப் போன்று தான் பிந்தரன்வாலே பஞ்சாபில் உருவெடுத்தார். அவரால் நாடே பிளவுபடும் சூழல்உருவானது. இன்று தொகாடியா என்ற பிந்தரன்வாலேவுக்கு எதிராக பொடா பயன்படுத்தப்பட்டாக வேண்டும்.

தங்களது குறுகிய கால நலனுக்காகவும், ஓட்டு வேட்டைக்காகவும் தொகாடியா போன்றவர்களை வளர விட்டுக்கொண்டிருக்கிறார்கள் சில கட்சியினர். இந்த நிலை தொடர்ந்தால் 1980களில் பஞ்சாபில் நாம் சந்தித்த அதேவேதனையை இந்த தேசம் விரைவில் சந்திக்க நேரிடும். இவர்களை கட்டுப்படுத்தவே முடியாமல் போய்விடும்என்றார்.

முன்னாள் ராணுவத் தளபதியின் பேச்சுக்கு பா.ஜ.க. எம்.பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பினர்.தொகாடியாவின் பெயரை அவர் குறிப்பிட்டுப் பேசியது தவறு என்றும் அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என்றும் கூச்சல் போட்டனர்.

ஆனால், முன்னாள் ராணுவத் தளபதியின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி அதை அவைக் குறிப்பில்இருந்து நீக்க மாநிலங்களவையின் துணைத் தலைவர் ராமாசங்கர் கெளசிக் கூறிவிட்டார்.

இதையடுத்து தொடர்ந்து பேசிய செளத்ரி, தொகாடியாவுக்கு எதிராக பொடாவை பயன்படுத்தாவிட்டால் அந்தச்சட்டத்தைக் கொண்டு வந்ததற்கே அர்த்தமில்லை. ஒவ்வொரு மாநிலமாகப் போய் திரிசூலங்களை மக்களிடம்வினியோகித்து வருகிறது வி.எச்.பி. ஒரு பொறுப்புள்ள, தேசப் பற்றுள்ள அமைப்பு இந்தச் செயலைச் செய்யுமா?

மதத்தின் பெயரால் மக்களைப் பிளந்து இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள். தேசத்தை விட இவர்களுக்குஓட்டு முக்கியமாகிவிட்டதா? என்று கடுப்புடன் கேட்டுவிட்டு அமர்ந்தார் செளத்ரி.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் படம் திறப்பு:

இதற்கிடையே ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான சாவர்கரின் படம் நாளை நாடாளுமன்றத்தில் திறந்து வைக்கப்படஉள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. அரசு செய்துள்ளது. ஜனாதிபதி அப்துல் கலாம் இந்தப் படத்தை திறந்து வைக்கஉள்ளார். ஆனால், இந் நிகழ்ச்சியைப் புறக்கணிக்கப் போவதாக அனைத்து எதிர்க் கட்சிகளும் அறிவித்துள்ளன.

இந்தப் படத்தை நீங்கள் திறக்கக் கூடாது என்று கோரி அப்துல் கலாமுக்கு எதிர்க் கட்சிகள் கடிதமும் எழுதியுள்ளன.பிரிவினைவாதத்தைத் தூண்டிய சாவர்க்கரின் படத்தைத் நீங்கள் திறந்து வைத்தால் அது மதவாத சக்திகளுக்குமேலும் ஊக்கம் தரும் என இக் கட்சிகள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளன.

மகாத்மா காந்தியின் கொலை வழக்கில் சாவர்கர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. மதரீதியில்நாட்டை இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாக உடைக்கும் முகமது அலி ஜின்னாவின் யோசனைக்கு ஆதரவுதந்தவர் இவர் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X