For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்களிடம் 6,000 சேலைகள் இல்லை: சசிகலா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வருமானத்தை மீறி சொத்துக் குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோரிடம் இன்றும் இரண்டாவது நாளாகவிசாரணை நடந்தது.

நேற்று இந்த வழக்குத் தொடர்பாக முதலாவது தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் வளர்ப்பு மகன்சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். நீதிபதி ராஜமாணிக்கம் இந்த வழக்கை விசாரித்துவருகிறார்.

விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றத்தின் கேள்விகள் ஜெயலலிதாவுக்கு அனுப்பப்பட்டன. அவரது பதில்களுடன் ஆஜராகும் அவரது வழக்கறிஞரிடம் தான் விசாரணை நடக்கிறது.

நேற்று ஆஜரான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் நீதிபதி சுமார் 300 கேள்விகளைக் கேட்டார். நீதிபதியின் சரமாரிக்கேள்விகளுக்கு இந்த 3 பேரும் ஆம், இல்லை, தெரியாது, நினைவில்லை, விளக்கமாக பின்னர் தெவிக்கிறேன் என்று மட்டுமேபதில் அளித்தனர்.

மொத்தம் 440 பக்கங்களில் இந்தக் கேள்விகள் இடம் பெற்றிருந்தன.

முன்னதாக 10.30 மணிக்கே நீதிபதி வந்துவிட சசிகலாவும் இளவரசியும் 11 மணிக்குத் தான் வந்தனர். டிராபிக் ஜாம் காரணமாகதாமதமாகிவிட்டதாக காரணம் கூறினர்.

சுதாகரன் கருப்புக் கண்ணாடியை நீதிமன்றத்துக்குள்ளும் கழற்றவில்லை. கண் அலர்ஜி இருப்பதால் அதை அணிந்திருக்கநீதிபதியிடம் அவரது வழக்கறிஞர் அனுமதி கோரினார். இதற்கு அனுமதியும் தரப்பட்டது.

இந் நிலையில் இன்றும் இந்த வழக்கு விசாரணை தொடரும் என்று நீதிபதி அறிவித்தார். இதையடுத்து ஜெயலலிதாவுக்கு ராசியானபச்சைக் கலர் சேலையில் தனி நீதிமன்றத்துக்கு வந்தார் சசிகலா. உடன் இளவரசியும் வந்தார்.

சுதாகரன் வழக்கம்போல் கருப்பு கண்ணாடி, பட்டு சபாரியில் படு பந்தாவாக வந்தார்.

இன்று நீதிபதியிடம் சாட்சியளித்த சசிகலா, போயஸ் கார்டன் வீட்டில் 914 பட்டுச் சேலைகளும், 6,200 சேலைகளும் இருந்தாகதிமுக ஆட்சியில் தவறான குற்றம் சாட்டப்பட்டது. அந்த சேலைகளை அதிகாரிகள் வெளியில் இருந்து கொண்டு வந்து எங்கள்கணக்கில் சேர்த்தனர். அந்தச் சோதனை நடந்தபோது நானே எனது சகோதரியோ (ஜெயலலிதா) வீட்டில் இல்லை. இவ்வளவுசேலைகள் வைக்க போயஸ் கார்டன் வீட்டில் இடமே இல்லை. மக்களிடம் எங்களைக் கேவலப்படுத்த வெளியில் இருந்துகொண்டு வைத்து வீட்டில் வைத்தனர் திமுக ஆட்சியினர் என்றார்.

பெசன்ட் நகரில் சுதாகரனுக்கு வீட்டு வசதிவாரிய வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி கூறியுள்ளாரே என்று நீதிபதி கேட்டார்.இதற்கு சசி, இளவரசு, சுதாகரன் மூவருமே தெரியாது என பதிலளித்தனர்.

நீதிபதி: ஜெயலலிதாவின் வீட்டில் 99 கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 9 வைரக் கல் கடிகாரங்கள் இருப்பதாகவும்.அவற்றின் மதிப்பு ரூ. 9.7 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளதே?

சசிகலா: அதில் என் கடிகாரங்களும் உள்ளன. ஆனால், மதிப்பை வேண்டுமென்றே அதிகப்படுத்தி காட்டியுள்ளார்கள்.

சுதாகரன், இளவரசி: இது குறித்து எங்களுக்கு ஏதும் தெரியாது.

நீதிபதி: ஜெயலிதாவின் வீட்டில் 326 ஜோடி செருப்புகள் இருந்ததாகவும். அவற்றின் மதிப்பு ரூ. 2.9 லட்சம் என்று அதிகாரிசாட்சியம் கூறியிருக்கிறாரே?

சசிகலா: ஒவ்வொரு தனி செருப்புக்கும் ரூ. 900 மதிப்பு போட்டு இவ்வாறு அதிகப்படுத்தி காட்டியிருக்கிறார்கள்.

நீதிபதி: உங்கள் வழக்கறிஞர் வேலையை நீங்கள் குறைக்க வேண்டாம். அதிகாரி சொன்ன மதிப்பு சரியா தவறா என்று மட்டும்சொல்லுங்கள்.

சசிகலா: மதிப்பு தவறு.

இவ்வாறு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் சசிகலா.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X