சதாமுக்கு அடைக்கலம் கொடுக்கிறது இத்தாலி
ரோம்:
வளைகுடா போர் வரும் பட்சத்தில் ஈராக் அதிபர் சதாம் ஹூசேனுக்கு அடைக்கலம் தர இத்தாலியில்உள்ள சோவேரியா மண்ணேலி என்ற நகரம் முன் வந்துள்ளது.
ஈராக் மீது எப்படியும் போர் தொடுத்தே ஆக வேண்டும் என்று அமெரிக்காவும், பிரிட்டனும்கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளன. ஈராக் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஐக்கியநாடுகள் சபையில் அடுத்தடுத்து தீர்மானங்களைக் கொண்டு வந்துள்ளன இந்த இரு நாடுகளும்.
இதற்கிடையே தன் உளவுத் துறையான சி.ஐ.ஏ. மூலம் சதாமைக் கொல்ல அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஈராக்கில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் பட்சத்தில் சதாமுக்கு அடைக்கலம் தரசோவேரியா நகரம் முன் வந்துள்ளது. ""எங்கள் நகரில் வந்து சதாம் நிம்மதியாக இருக்கலாம்,சாப்பிடலாம், தூங்கலாம். மூன்று போலீசார் அவரை இரவும் பகலும் இடைவிடாமல் கவனித்துக்கொள்வார்கள்"" அந்நகர மேயர் கூறியுள்ளார்.
"ஈராக்கை விட பயங்கர நாடுகள் உள்ளன":
இதற்கிடையே ஈராக் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பான ஐ.நா. சபையில்கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானங்களை ரஷ்யா தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
ஈராக்கை விட தீவிரவாதம் அதிகம் தலைவிரித்து ஆடும் நாடுகள் உள்ளன. அவற்றை விட்டுவிட்டுஈராக் மீது மட்டும் தாக்குதல் நடத்த முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ரஷ்ய அதிபர்விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
ஈராக் மீதான தாக்குதல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானம்கொண்டுவரப்படும் போது, "வீட்டோ" அதிகாரத்தைப் பயன்படுத்தும் அதிகாரம் ரஷ்யாவுக்கும்உள்ளது.
ஏற்கனவே இதே "வீட்டோ" அதிகாரம் உள்ள ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் ஈராக் மீதுதாக்குதல் நடத்த துடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த "வீட்டோ" அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த மூன்று நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு சபையின்தீர்மானத்தைக் கடுமையாக எதிர்க்கும் என்று தெரிகிறது.
இந்நிலையில் சதாம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் ஈராக் மீது தாக்குதல் நடத்ததாத வகையில் எடுக்கப்படும் ஐ.நா. சபையின்எந்த ஒரு தீர்மானத்தையும் ஆதரிப்போம் என்று அரபு நாடுகள் கூறியுள்ளன.
ஈராக் மீதான தாக்குதல் விஷயத்தில் எந்தப் பக்கம் சாய்வது என்று விழித்துக் கொண்டிருந்தபாகிஸ்தான் தற்போது தைரியமாக (?) ஒரு முடிவுக்கு வந்துள்ளது. ஈராக் மீது தாக்குதல் நடத்துவதுதொடர்பான இரண்டாவது தீர்மானத்திற்கு எதிராக ஓட்டளிக்க அந்நாடு முடிவெடுத்துள்ளது.
4 ஏவுகணைகளை அழித்தது ஈராக்:
இதற்கிடையே பேரழிவை ஏற்படுத்தும் அல்-சமெளத்-2 ரகத்தைச் சேர்ந்த 4 ஏவுகணைகளை இன்றுஅழித்து விட்டதாக ஈராக் கூறியுள்ளது.
இந்த ஏவுகணைகள் ஈராக்கிடம் இருப்பதை ஐ.நா. ஆயுதக் கண்காணிப்புக் குழுவினர் கண்டுபிடித்துஅவற்றைத் தடை செய்தனர். மேலும் அதை அழிக்க வேண்டும் என்றும் ஈராக்கிடம் கூறியிருந்தனர்.
அதன்படி இரண்டு ஏவுகணைகளையும் ஈராக் இன்று அழித்து விட்டதாகத் தெரிவித்துள்ளது. ஒருசில நிமிடங்களிலேயே அவை இரண்டும் அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே ஐ.நா. ஆயுதக் கண்காணிப்புக் குழுத் தலைவரான ஹான்ஸ் பிளிக்ஸின் பதவிக் காலம்வரும் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் அவர் பதவிக் காலம்முடிவடைவதாக இருந்தது.


