For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாத்தான்குளம்: 17,492 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக பெரும் வெற்றி

By Staff
Google Oneindia Tamil News

சாத்தான்குளம்:

Neelamegavarnamசாத்தான்குளத்தில் அதிமுக 17,492 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்தது. இதன்மூலம்சாத்தான்குளம் காங்கிரசின் கோட்டை என்ற நிலையை அதிமுக உடைத்தெறிந்துள்ளது.

இத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் நீலமேகவர்ணம் 56,945 வாக்குகள் பெற்றார். அவரைஎதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரனுக்கு 39,453 வாக்குகளே கிடைத்தன.

இத் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்து அதிமுக ஆதரவு தமிழ் மாநில காமராஜர் காங்கிரசில் சேர்ந்தமணிநாடார் மறைவையடுத்து இங்கு இடைத் தேர்தல் நடந்தது.

காலம் காலமாக காங்கிரஸ் கோட்டையாக விளங்கிய இந்தத் தொகுதியில் முதல்முறையாக அதிமுக களத்தில்இறங்கியது. அமைச்சர்களை கடந்த இரு மாதங்களாகக் குவித்து தேர்தல் பணியில் இறங்கியது.

காங்கிரஸ் கட்சியும் களத்தில் குதித்தது. காங்கிரஸ் வாக்குகளை பிரித்தால் அதிமுக எளிதில் வெல்லும் என்பதால்திமுக போட்டியிடாமல் ஒதுங்கியது. நேரடியாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு கேட்கவில்லை என்றாலும் அக்கட்சிக்காக தூத்துக்குடி மாவட்ட திமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதே போல மதிமுகவினரும் காங்கிரசுக்குஆதரவாக இறங்கினர்.

அதிமுக கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டத்தால் அதிருப்தியில் உள்ள கிருஸ்தவ நாடார் சமூக மக்களின்வாக்குகளை நம்பி காங்கிரஸ் களத்தில் குதித்தது.

ஆனால், அதிமுகவோ தொகுதியையே மாற்றிக் காட்டியது. சாலைகள் புதுப்பிக்கப்பட்டன. புறம்போக்கு நிலத்தில்வசித்தவர்களுக்கு கேட்டவுடன் நிலப்பட்டா கிடைத்தது. தெருவுக்குத் தெரு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு 24மணி நேரம் தண்ணீர் வந்தது.

இது சாத்தான்குளம் மக்களை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தவிர கரன்சிகளும் குவிக்கப்பட்டுமக்களுக்கு வாரி இறைக்கப்பட்டன. அதிமுகவைச் சேர்ந்த வெளியூர்காரர்களும் தொகுதிக்குள் குவிக்கப்பட்டனர்.இதனால் அவ்வப்போது அதிமுகவினருக்கும் அப் பகுதியினருக்கும், காங்கிரஸ், திமுகவினருக்கும் இடையேமோதல் மூண்டவண்ணம் இருந்தன.

இதையடுத்து தொகுதியில் உள்ள அனைத்து வெளியூர் நபர்களையும் வெளியேற்றி தொகுதியை சீல் வைக்கதேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. ஆனால், காங்கிரஸ்காரர்களை மட்டும் வெளியேற்றிவிட்டு அதிமுகவினரைதொடர்ந்து தங்க வைத்ததாக போலீசார் மீது காங்கிரஸ் தலைவர்கள் புகார் கூறினர்.

கடந்த 26ம் தேதி இங்கு வாக்குப் பதிவு நடந்தது. அப்போது அமைச்சர்கள் வளர்மதி, அனிதா ராதாகிருஷ்ணன்தலைமையில் சுமார் 10 வாக்குச் சாவடிகளில் அதிமுகவினர் பெருமளவில் கள்ள ஓட்டு போட்டதாகவும் அதற்குபோலீசாரே துணையாக இருந்ததாகவும் காங்கிரசார் குற்றம் சாட்டினர்.

Mahendranமேலும் மாந்தோப்புக்குள் பதுங்கி இருந்த அதிமுகவினரை கள்ள ஓட்டுப் போட தனது காரில் அழைத்துச் செல்லமுயன்ற அதிமுக எம்.பி. மைத்ரேயனும் கையும் களவுமாக காங்கிரசாரிடம் பிடிபட்டார்.

அவரை காங்கிரசார் தாக்கினர். ஆனால், தேர்தல் கமிஷனிடம் இருந்து தப்புவதற்காக இந்தத் தாக்குதல் குறித்துவழக்கே பதிவு செய்யப்படவில்லை.

பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள இத் தொகுதியில் மொத்தம் 64.8 சதவீத வாக்குகள் பதிவாயின.

இந் நிலையில் தான் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக்கில்பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இத் தொகுதியில் மின்னணு எந்திரங்கள் மூலம் பதிவானவாக்குகளை மொத்தம் 50 பேர் கொண்ட குழு காலை 8 மணிக்கு எண்ண ஆரம்பித்தது.

வாக்குகள் எண்ணப்பட்ட தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வாக்கு எண்ணும் அறைக்குள் அரசியல் கட்சிகளின் ஏஜென்டுகள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

10.45 மணியளவில் 18 சுற்றுக்களாக அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டன. இதில் 15,400 வாக்குகள்வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் நீலமேகவர்ணம் பெரும் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரன்படுதோல்வி அடைந்தார்.

வாக்குகள் விவரம்:

மொத்த வாக்காளர்கள்: 1,55,093

ஆண்கள்: 72,932

பெண்கள்: 82,161

வாக்களித்தவர்கள்: 1,00,450

ஆண்கள்: 47,741

பெண்கள்: 52,709

அதிமுக பெற்ற வாக்குகள்: 56,495

காங்கிரஸ் பெற்ற வாக்குகள்:39,453

வாக்கு வித்தியாசம்- 17,492

இத் தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சைகள் 23 பேரும் டெபாசிட் தொகையை இழந்தனர்.

""அம்மா மீது மக்கள் வைத்த பாசம்"":

இதற்கிடையே தன்னுடைய வெற்றி குறித்து நிருபர்களிடம் நீலமேகவர்ணம் கூறுகையில், "அம்மா (ஜெயலலிதா)மீது மக்கள் வைத்துள்ள பாசமே ஓட்டுக்களாக மாறியுள்ளன. காங்கிரசாரின் மதமாற்றத் தடைச் சட்ட எதிர்ப்புபிரச்சாரம் மக்களிடம் எடுபடவில்லை. அம்மாவின் ஆசியுடன் தொகுதி மக்களுக்காகப் பாடுபடுவேன்" என்றார்.

57 வயதாகும் விவசாயியான நீலமேகவர்ணம் 5ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அவருக்கு ஜெயம் என்றமனைவி, தமிழ்ச் செல்வி, சுதா, விஜி ஆகிய மகள்கள் மற்றும் கதிரவன் என்ற மகன் ஆகியோர் உள்ளனர்.

அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கியதிலிருந்தே அக்கட்சியில் உறுப்பினராக உள்ளார் நீலமேகவர்ணம்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X