சமையல் காஸ் விலை மீண்டும் உயர்கிறது
டெல்லி:
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் காரணமாக சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்ஆகியவற்றின் விலை சில நாட்களில் மிகக் கடுமையாக உயர உள்ளன.
நடுத்தர, ஏழை மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவுக்கும் மண்ணெண்ணெய்க்கும் மத்தியஅரசு மானியம் அளித்து வருகிறது. இதனை விற்கும் பெட்ரோலிய நிறுவனங்கள் மானியத்தைக் கழித்துக் கொண்டுதான் மக்களிடம் பணம் வசூலிக்கின்றன.
இந்த பட்ஜெட்டில் சமையல் எரிவாயு மீதான மத்திய அரசின் மானியம் சிலிண்டெருக்கு ரூ. 67.75ல் இருந்து ரூ. 46ஆகக் குறைந்துவிட்டது. இதனால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு சிலிண்டெர் ஒன்றுக்கு ரூ. 21.75 நஷ்டம்ஏற்படும். இதனைச் சரிகட்ட சிலிண்டெரின் விலையை ரூ. 22 முதல் ரூ. 25 வரை உயர்த்த இந்த நிறுவனங்கள்முடிவு செய்துள்ளன.
அதே போல மண்ணெண்ணெயின் விலையில் லிட்டருக்கு ரூ. 2.45 யை மானியமாக அரசு வழங்கி வந்தது. இந்தபட்ஜெட்டில் இந்த மானியம் ரூ. 1.64 ஆகக் குறைந்துவிட்டது. இதனால் மண்ணெண்ணெயின் விலை லிட்டருக்குரூ. 1 உயரும் என்று தெரிகிறது.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் எரிவாயு சிலிண்டெருக்கும் மண்ணெண்ணெய்க்கும் மானியம் வழங்க மத்திய அரசு ரூ.6,300 கோடியை ஒதுக்கியுள்ளது.
ஆனால், கடந்த ஆண்டு அரசின் குறைவான மானியத்தால் சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விற்றபெட்ரோலிய நிறுவனங்களுக்கு ரூ. 3,200 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதை ஈடுகட்டும் வகையில் இந்த ஆண்டுபட்ஜெட்டில் கூடுதலாக மானியத் தொகை அறிவிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு ஏப்ரலில் ஒரு டன் சமையல் வாயுவின் விலை சர்வதேச சந்தையில் 185 டாலராக இருந்தது.இப்போது இதன் விலை 356 டாலராக உயர்ந்துள்ளது.
இதனால், மத்திய அரசு மானியம் தந்தாலும் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விற்பதால் தொடர்ந்துநஷ்டமே ஏற்படுவதாக இந்த நிறுவனங்கள் கூறுகின்றன. இதையடுத்து விலையை அதிகரிக்கப் போவதாகஅறிவித்துள்ளன.
இதில் இறுதி முடிவை பெட்ரோலியத்துறை அமைச்சர் ராம்நாயக் எடுப்பார்.
ஆனால், ஓட்டு வங்கியான ஏழை மக்களால் பெருமளவில் பயன்படுத்தப்படும் மண்ண்ெணெயின் விலையைஉயர்த்த மத்திய அரசு அனுமதிக்காது என்று தெரிகிறது. இதனால் சமையல் காஸ் விலை மட்டும் உயரலாம் என்றுதெரிகிறது.
சமீபத்தில் தான் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்தன.


