பிரபாகரனை சந்தித்தார் பாலசிங்கம்
கிளிநொச்சி:
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அந்த இயக்கத்தின் அரசியல்ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் இன்று வவுனியாவில் சந்தித்துப் பேசினார்.
புலிகளின் அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான பாலசிங்கம் தன் மனைவி அடேல்பாலசிங்கம் மற்றும் லண்டன் புலிகள் அலுவலகத்தைச் சேர்ந்த எஸ். அருணாசலம் ஆகியோருடன்லண்டனிலிருந்து நேற்று மாலை கொழும்பு வந்து சேர்ந்தார்.
பின்னர் இலங்கை அரசுக்குச் சொந்தமான ராணுவ ஹெலிகாப்டரில் அவர்கள் இருவரும்கிளிநொச்சிக்கு வந்து சேர்ந்தனர். புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான சு.ப. தமிழ்ச் செல்வன்உள்ளிட்டவர்கள் அவர்களை அன்புடன் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து பிரபாகரன் தங்கியுள்ள வவுனியா காட்டுப் பகுதிக்கு பாலசிங்கமும் அவருடையமனைவியும் புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை பிரபாகரனைச் சந்தித்துப் பேசினார் பாலசிங்கம். வரும் 18ம் தேதி முதல்21ம் தேதி வரை ஜப்பானில் நடைபெறவுள்ள ஆறாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள்தொடர்பாக இருவரும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தைகளுக்காக ஜப்பானுக்குச் செல்லும் வரை பாலசிங்கம் வவுனியாவிலேயேஇருப்பார் என்று தெரிகிறது. வரும் ஜூன் மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள நிதி திரட்டும் மாநாடுதொடர்பாகவும் அப்போது இரு தலைவர்களும் பேச்சு நடத்தவுள்ளனர்.
பிரபாகரன்-பாலசிங்கம் சந்திப்பையொட்டி யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி உள்ளிட்ட வட,கிழக்கு இலங்கை பகுதிகளில் புலிகள் தீவிரப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். கடந்தஆண்டு அக்டோபருக்குப் பின்னர் தற்போதுதான் முதல் முறையாகச் சந்திக்கின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.


