திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை எரித்துக் கொன்ற காதலன்
மதுரை:
தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய பெண்ணை அவளுடைய காதலன்உயிரோடு எரித்துக் கொன்றான். இந்தக் கொடூர சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.
மதுரை-அவனியாபுரத்தைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவரின் மகள் பஞ்சுவும், அதே பகுதியைச்சேர்ந்த போஸ் என்பவரின் மகன் வேல்முருகனும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக காதலித்துவந்தனர்.
இந்நிலையில் வேல்முருகனுக்கு திருமணம் செய்வதற்காக அவனுடைய பெற்றோர் வேறொருஇடத்தில் பெண் பார்த்தனர். இதையொட்டி நிச்சயதார்த்தமும் நடக்க இருந்தது.
இந்த விஷயம் பஞ்சுவுக்குத் தெரிய வந்தது. அவர் உடனே வேல்முருகனிடம் சென்று, தன்னைத்திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையேவாக்குவாதம் ஏற்பட்டது.
பஞ்சு தொடர்ந்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் வேல்முருகன்ஆத்திரமடைந்தான். அவனுடன் வேறு சிலரும் சேர்ந்து கொண்டு பஞ்சுவின் உடலில் தீ வைத்துஅவரை எரித்தனர்.
பாதி எரிந்த நிலையிலேயே அந்தப் பெண்ணை தரதரவென்று இழுத்துக் கொண்டு வீட்டுக்குவெளியே வந்து திறந்தவெளிப் பொட்டலில் போட்டு விட்டு அவர்கள் ஓடிவிட்டனர்.
இதற்கிடையே பஞ்சு போட்ட அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த மக்கள் அவர் எரிந்துகொண்டிருந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். அவரை உடனடியாகக் காப்பாற்றி மதுரைஅரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பஞ்சு பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம்அவனியாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படுகொலை தொடர்பாக வேல்முருகன் உள்ளிட்டவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.


