நெடுமாறன் ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் நிராகரிப்பு
சென்னை:
பொடா வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவரான பழ.நெடுமாறன் உள்ளிட்ட 5 பேரும் பொடா சிறப்பு நீதிமன்றத்திலேயே ஜாமீன் கேட்கலாம் என்று கூறிஅவர்களுடை ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக கடந்த ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி நெடுமாறன் கைதுசெய்யப்பட்டார். மேலும் தமிழர் தேசிய இயக்க நிர்வாகிகளான சுப. வீரபாண்டியன், பாவாணன்,டாக்டர் தாயப்பன் மற்றும் பரந்தாமன் ஆகியோரும் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகல்களும்வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த ஐந்து பேரும் தங்களுக்கு ஜாமீன் வேண்டுமென்று கோரி உயர் நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம் நெடுமாறன் உள்ளிட்ட ஐந்து பேரும் பொடாசிறப்பு நீதிமன்றத்திலேயே தங்களுக்கு ஜாமீன் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கலாம் என்றுஅறிவுறுத்தியது.
கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு வரை அவர்கள் ஜாமீனில் விடுதலை கோருவதற்கு பொடாசட்டத்தில் இடம் உண்டு என்று கூறிய நீதிபதிகள் நெடுமாறன் உள்ளிட்ட ஐந்து பேரின் ஜாமீன்மனுவையும் தள்ளுபடி செய்தனர்.


