பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கின: பறக்கும் படை கண்காணிப்பு தீவிரம்
சென்னை:
தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் தொடங்கின. தமிழ்-முதல் தாள் பாடத்திற்கான தேர்வுஇன்று நடைபெற்றது.
இந்த ஆண்டுக்கான பிளஸ் டூ தேர்வுகள் இன்று காலை தொடங்கின. தமிழகம் முழுவதும் சுமார்4,66,786 மாணவ, மாணவிகள் தேர்வுகளை எழுதுகின்றனர். இவர்களைத் தவிர சுமார் 42,177 பேர்தனித் தேர்வர்களாக தேர்வுகளை எழுதுகின்றனர்.
தமிழகம் முழுவதும் 1,353 மையங்களில் பிளஸ் டூ தேர்வுகள் நடைபெறுகின்றன.
தேர்வு எழுதும் மாணவர்கள் "பிட்" அடிப்பது போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடாமல்தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 1,000 ஆசிரியர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பள்ளிகளில் திடீர் திடீரென்று சென்று சோதனைகள் நடத்தி வருகின்றனர். "பிட்" அடித்துப்பிடிபட்டால் 5 ஆண்டுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னையில் தேர்வு நடக்கும் சில பள்ளிகளில் கல்வி அமைச்சர் செம்மலை நேரில்சென்று பார்வையிட்டார். இந்தத் தேர்வில் சிறு தவறு கூட ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில்கவனமாக இருக்கிறோம் என்று நிருபர்களிடம் கூறினார் அவர்.
இந்த ஆண்டு ரகசியக் குறியீட்டு எண் கொண்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்றும்இதனால் போலி மதிப்பெண் சான்றிதழ் நடமாட்டம் தடுக்கப்படும் என்றும் செம்மலை கூறினார்.
தேர்வுகள் முடிந்த பின்னர் விடைத் தாள்களைத் திருத்தி விரைவாக முடிவுகளை வெளியிடவும் அரசுத்தேர்வுத் துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. கடைசித் தேர்வு நடக்கும் வரும் 25ம்தேதியே விடைத் தாள்களைத் திருத்தும் பணி தொடங்கும் என்று அரசுத் தேர்வுத் துறை இயக்குனர்பழனிவேலு கூறினார்.
இதற்கிடையே சி.பி.எஸ்.இ. தேர்வுகளும் இன்று தொடங்கின.


