கோவை, ராமநாதபுரத்தில் "கொள்ளையோ கொள்ளை"
கோயம்புத்தூர் & ராமநாதபுரம்:
கோயம்புத்தூரில் கோவில் பூசாரியின் வீட்டுக்குள் புகுந்து 100 பவுன் நகை மற்றும் பணம்கொள்ளையடிக்கப்பட்டது. அதேபோல் ராமநாதபுரம் அருகே பெட்ரோல் பங்க் கேஷியரைவழிமறித்த கொள்ளையர்கள் ரூ.60,000 பணத்தை பறித்துச் சென்றனர்.
கோயம்புத்தூர்-பொன்னையராஜாபுரத்தைச் சேர்ந்த ஒரு கோவில் பூசாரி தன் குடும்பத்தினருடன்நான்கு நாட்கள் சுற்றுலா சென்று விட்டு நேற்று காலை ஊர் திரும்பினார்.
அப்போது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 100 பவுன் நகைகள்மற்றும் ரூ.50,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் போலீசாரிடம் புகார் செய்தார். கைரேகே நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்களுடன் சென்று அவர் வீட்டில் விசாரணை நடத்திய போலீசார், கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.
வழிப்பறிக் கொள்ளை:
இதற்கிடையே ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல் பங்க் கேஷியரை 3 கொள்ளையர்கள் தாக்கிஅவரிடமிருந்து ரூ.60,000 பணத்தைப் பறித்துச் சென்றனர்.
சி.கே. மங்களம் என்ற ஊரைச் சேர்ந்த அந்த கேஷியர் நேற்று அதிகாலை பணியில் இருந்தபோதுமூன்று பேர் பைக்கில் அங்கு வந்தனர்.
பின்னர் திடீரென்று கேஷியரைத் தாக்கிய அந்தக் கும்பல், பெட்ரோல் பங்க்கின் மேஜை டிராயரில்வைக்கப்பட்டிருந்த ரூ.60,000 பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டனர்.
தப்பியோடிய மூன்று கொள்ளையர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications