தமிழக குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க முன் வருகிறது ஹாலந்து
சென்னை:
தமிழக குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக உதவ ஹாலந்து நாடு முன் வந்துள்ளது.
சென்னை வந்துள்ள இந்தியாவுக்கான ஹாலந்து தூதர் கோச் இங்கு நடந்த ஒரு கருத்தரங்கில் இதுதொடர்பாகப் பேசுகையில்,
தமிழக மக்கள் குடிநீர் பிரச்சனையால் அல்லாடிக் கொண்டிருப்பதை நாங்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
இந்தப் பிரச்சனையில் தமிழகத்திற்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம். இந்தப் பிரச்சனையைத்தீர்ப்பதற்காக எங்கள் நாட்டில் உள்ள தேர்ந்த நிபுணர்களை இங்கு அனுப்பவும் நாங்கள் தயாராகஉள்ளோம்.
இதேபோல் தகவல் தொழில்நுட்பம், உயிர் தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறுதுறைகளிலும் இந்தியாவுக்கும் ஹாலந்துக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மேம்படுவதற்கும்அதிக வாய்ப்புகள் உள்ளன என்றார் கோச்.
அமைச்சரவை ஆலோசனை:
இதற்கிடையே இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னை-தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் குடிநீர் பிரச்சனை தொடர்பாகவிவாதிக்கப்பட்டது.
வரும் கோடை காலத்தில் ஏற்படவிருக்கும் குடிநீர் பிரச்சனையை எவ்வாறு சமாளிப்பது என்பதுகுறித்து ஜெயலலிதாவும் அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர்.
குடிநீர் கேட்டு சாலை மறியல்:
இதற்கிடையே பெரம்பலூரில் குடிநீர் கோரி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்ததால்அங்கு 5 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பலூரை அடுத்த அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் திடீரென்று சாலை மறியலில்இறங்கினர்.
தங்களுக்கு இதுவரை ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவந்தது. ஆனால் தற்போது அதைக் கூட நிறுத்தி விட்டார்கள் என்று கூறி காலிக் குடங்களுடன்அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்கள் சாலை மறியலில் இறங்கியதைத் தொடர்ந்து பெரம்பலூர்-துறையூர் இடையே சுமார் ஐந்துமணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நிலைமையைக் கேள்விப்பட்டதும் அங்கு வந்த தாசில்தாரை மக்கள் சுற்றி வளைத்து நின்று கொண்டு"கெரோ" செய்தனர். பின்னர் அதிகாரிகள் சமாதானப்படுத்திய பின்னரே மக்கள் கலைந்து சென்றனர்.


