63 வயது பாட்டி தலைமையிலான விபச்சார கும்பல் கைது
சென்னை:
சென்னையில் 63 வயது பாட்டி தலைமையில் விபச்சாரம் நடத்தி வந்த 2 பெண்களையும், ஒருபுரோக்கரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மயிலாப்பூர் ராக்கியப்பன் தெருவில் விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதுதொடர்பாக மாறு வேடத்தில் இருந்த போலீஸார், சாந்தி என்ற பாட்டியின் வீட்டுக்குச் சென்றனர்.அங்குதான் விபச்சாரம் நடப்பதாகத் தகவல் கிடைத்தது.
வாடிக்கையாளர் போல ஒரு போலீஸ்காரர் சாந்தியை அணுகினார். இதையடுத்து அவரை உள்ளேஅழைத்த சாந்தி அங்கிருந்த இரண்டு பெண்களைக் காட்டினார். அவர்களுடன் உல்லாசமாக இருக்கரூ.2,000 தர வேண்டும் என்றும் அந்தப் பாட்டி கூறியுள்ளார்.
இதையடுத்து தனது நண்பர் ஒருவரும் காத்திருப்பதாக கூறிய அந்த போலீஸ்காரர் தன்னிடமிருந்தசெல்போன் மூலம் வெளியே காத்திருந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்குத் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸ் குழு உள்ளே நுழைந்தது.அங்கிருந்த 63 வயதான பாட்டி சாந்தி, புரோக்கர் குமார், விபச்சாரம் செய்வதற்காகக் காத்திருந்த சுபாமற்றும் விஜயா ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
அந்த வீட்டில் ஏ.சி. அறைகளும் இருந்தன. நவீன முறையில் அறைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.சமீபத்தில் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காந்தப் படுக்கைகளும் அங்கு இருந்தன.அந்தக் குறிப்பிட்ட படுக்கையில் விபச்சாரப் பெண்களுடன் "சந்தோஷமாக" இருப்பதற்கு தனி"ரேட்டாம்".
ஏற்கனவே ஒருமுறை விபச்சார வழக்கில் சாந்தி கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.


