ஈராக்: அனைத்து கட்சி தலைவர்களுடன் வாஜ்பாய் பேச்சு
டெல்லி:
ஈராக் விவகாரம் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் வாஜ்பாய் ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அடுத்தவாரத்திற்குள் ஈராக்கை அமெரிக்கா தாக்குவது உறுதியாகிவிட்டது. இது தொடர்பாக பிரதமர் வாஜ்பாயுடன்அதிபர் புஷ் தொலைபேசியில் பேசினார்.
அப்போது ஈராக் தாக்குதலுக்கு இந்தியாவின் ஆதரவைக் கோரினார். ஆனால், தாக்குதலை இந்தியாஎதிர்ப்பதாகவும், ஐ.நாவின் அனுமதி இல்லாமல் தன்னிச்சையாக நடத்தப்படும் எந்தத் தாக்குதலையும் ஏற்கமுடியாது எனவும் வாஜ்பாய் கூறினார்.
அதே நேரத்தில் தீவிரவாதத்தைத் தூண்டி வரும் பாகிஸ்தானை அமெரிக்கா தீவிரமாகக் கட்டுப்படுத்தினால் ஈராக்விஷயத்தில் இந்தியாவும் விட்டுத் தரும் என வாஜ்பாய் கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து முஷாரப்பை புஷ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போதுகாஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு மேலும் தீவிர நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு முஷாரப்பை புஷ் வற்புறுத்தினார்.
ஈராக் விஷயத்தில் தங்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் எனவும் முஷாரபுக்குபுஷ் நெருக்குதல் கொடுத்தார்.
இந் நிலையில் ஜார்ஜ் புஷ்சுடன் தான் நடத்திய பேச்சு குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும்விளக்கவும் இந்த விவகாரத்தில் எந்த மாதிரியான நிலையை எடுப்பது என்பது குறித்துப் பேசவும்அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை இன்று வாஜ்பாய் கூட்டியுள்ளார்.
ஈராக்கைத் தாக்க காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் கடும் எதிர்ப்புத்தெரிவித்து வருகின்றன.
இந் நிலையில் ஆயுதங்கள் ஒழிப்பில் ஈராக் தங்களுக்கு முழு ஒத்துழைப்புத் தந்து வருவதாக ஐ.நா.ஆயுதக் கண்காணிப்பாளர் ஹான்ஸ் பிலிக்ஸ் கூறியுள்ளார். அமெரிக்காவின் நெருக்குதலால் தான்ஈராக் இந்த அளவுக்கு ஒத்துழைப்பதாகக் கூறிய அவர், அதே நேரத்தில் ஈராக்கைத் தாக்க வேண்டியஅவசியம் இல்லை என்றார்.
ஆனால், ஆயுதங்களை ஒழிப்பதில் ஈராக் முழு ஒத்துழைப்புத் தரவில்லை என அதிபர் புஷ்,பாதுகாப்பு அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பீல்ட், வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல்ஆகியோர் கூறியுள்ளனர்.
இதனால் அந் நாட்டைத் தாக்க இரண்டாவது தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையில் முன்வைப்போம் என்று கூறியுள்ளனர்.
ஆனால், அப்படித் தீர்மானம் வைக்கப்பட்டால் அதை நிராகரிப்போம் என ரஷ்யா, பிரான்ஸ்,ஜெர்மன், சீனா ஆகியவை திட்டவட்டமாக மீண்டும் அறிவித்துள்ளன. குறிப்பாக ஜெர்மனியும்,பிரான்ஸ்சும் ன்த விஷயத்தில் அமெரிக்காவுக்கு பணிய மாட்டோம் என கூறியுள்ளன.
இந் நிலையில் போரைத் தவிர்க்கக் கோரி புஷ்ஷை வலியுறுத்த போப் ஜான்பால் தனது தூதரைவாஷிங்டனுக்கு அனுப்பியுள்ளார்.
போருக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. லண்டனில்ஆயிரக்கணக்கான பள்ளிக் குழந்தைகளும், கவிஞர்களும் போருக்கு எதிராக மாபெரும் பேரணிநடத்தினர்.
பெங்களூரில் பல்வேறு மகளிர் அமைப்பினர் போரை எதிர்த்து ஆர்பாட்டப் பேரணி நடத்தினர்.


