மைல் கற்களில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும்: கருணாநிதி
சென்னை:
தமிழகத்தில் மைல் கற்களில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும். நேரடியாகவோ, மறைமுகமாகவோஇந்தி திணிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள மைல் கற்களில் தமிழ் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து நேற்றுநாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிஎம்.பிக்களும் ஒற்றுமையுடன் தமிழுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
இதை எதிர்த்தும் இந்திக்கு ஆதரவாகக் குரலும் கொடுத்த சமாஜ்வாடி எம்.பிக்களை அடிப்பதற்காகத்திமுகவினர் பாய்ந்து சென்றதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்களவைஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று கருணாநிதி நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் எழுதப்படும் மைல் கற்களில் இந்தி திணிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுதொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளுடன் நான் பேசினேன். மைல் கற்களில் தமிழிலேயேஎழுதப்படும் என்று உறுதி அளித்தனர்.
தமிழகத்தில் தமிழ் மட்டும்தான் இருக்க முடியும். இருக்க வேண்டும். அதற்கு மைல் கற்களும்விலக்கல்ல.
நேற்று பிரதமர் வாஜ்பாய் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேசியுள்ளார். அதில்திமுக சார்பில் அமைச்சர் டி.ஆர்.பாலுவும் கலந்து கொண்டார். அக் கூட்டத்தில் மைல் கற்களில் தமிழ்இடம் பெறும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தொகுதியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விதிமுறைகளை மீறினார் என்பதைதேர்தல் கமிஷனே ஒப்புக் கொண்டுள்ளது. எனவே அந்தத் தொகுதியில் தோற்றுள்ள காங்கிரஸ்வேட்பாளர் வழக்குத் தொடர்ந்தால், தேர்தல் கமிஷன்தான் முக்கிய சாட்சியாகும் என்றார் கருணாநிதி.
கடும் நிதித் தட்டுப்பாட்டில் அரசு இருப்பதாகக் கூறும் முதல்வர் ஜெயலலிதா அரசு விழாக்களில்கலந்து கொள்ள தொடர்ந்து ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி வருகிறாரே என்று நிருபர்கள்கேட்டதற்கு, "அவருடைய சிக்கன நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று" என்று பதிலளித்தார்கருணாநிதி.


