அத்துமீறும் தமிழக மீனவர்களை கைது செய்ய இலங்கை அரசு உத்தரவு
கொழும்பு:
தங்கள் கடல் பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைபவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று இலங்கைகடற்படைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள்தாக்குதல் நடத்தி அவர்களைக் கடத்தியும் சென்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பைஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இலங்கை கடற்படைக்கு அந்நாட்டு அரசு அவசர அவசரமாக ஒரு உத்தரவைப்பிறப்பித்துள்ளது. அதில்,
இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி யார் நுழைந்தாலும் அவர்களை கடற்படையினர் உடனாயகக்கைது செய்ய வேண்டும்.
அதேபோல் இலங்கை மீனவர்களை வழிமறிக்கும் வெளிநாட்டு மீனவர்களையும் கைது செய்யவேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் கண்ணீர்:
இதற்கிடையே இலங்கை மீனவர்கள் தங்களை அடித்து மிகவும் கொடுமையான சித்திரவதைசெய்தனர் என்று அந்நாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் கண்ணீருடன்தெரிவித்தனர்.
ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 117 மீனவர்கள் கடந்த சில நாட்களில்இலங்கை மீனவர்களால் தாக்கப்பட்டு அந்நாட்டுக்குக் கடத்தப்பட்டனர்.
இச்சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், ராமேஸ்வரத்தில் பதற்றத்தையும்ஏற்படுத்தியுள்ளன.
இலங்கையின் தலைமன்னாரில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இந்தத் தமிழக மீனவர்களில்93 பேரை நேற்று தலைமன்னார் நீதிமன்றம் விடுவித்தது. அவர்கள் நேற்று மாலை இந்தியகடலோரக் காவல்படையின் கப்பல் மூலம் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.
ராமேஸ்வரத்தில் வந்து இறங்கிய பல மீனவர்கள் கையிலும், தலையிலும், காலிலும் மருந்துக்கட்டுக்களைப் போட்டிருந்தனர். அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில்,
நாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று பிளாஸ்டிக் படகுகளில் வந்த இலங்கைமீனவர்கள் குண்டுகளை வீசித் தாக்கினார்கள். இந்தத் தாக்குதலில் பலருக்கு மண்டை உடைந்தது.சிலருக்குக் கை, கால்கள் உடைந்தன.
எங்களைக் கடத்திய இலங்கை மீனவர்கள் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. ரத்தம் வழிந்துகொண்டிருந்தபோதும் கூட எங்களை அடித்து, உதைத்து கொடுமையாக அவர்கள் சித்திரவதைசெய்தனர்.
இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் பேசாலையில் உள்ள போலீஸ் காவலில்வைக்கப்பட்டோம். அதன் பிறகே காயம் பட்டவர்களை மருத்தவமனையில் சேர்த்தனர். அவர்களில்ஒருவர் இன்னும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் என்று அந்த மீனவர்கள் கண்ணீருடன்கூறினர்.
ராமேஸ்வரத்தில் பந்த்:
இந்நிலையில் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள எஞ்சிய தமிழக மீனவர்கள் அனைவரையும்மீட்கக் கோரி ராமேஸ்வரத்தில் இன்று முழு கடையடைப்பு நடந்தது.
அதேபோல் பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளிலும் கடைகளும், வர்த்தக நிறுவனங்களும்அடைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் சாலை மறியல்களும் நடைபெற்றன. மேலும்ராமேஸ்வரத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தை நோக்கி மீனவர்களும் அவர்களுடையகுடும்பத்தினருமாக சுமார் 500 பேர் ஊர்வலம் சென்றனர்.
அதேபோல் பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளிலும் கடைகளும், வர்த்தக நிறுவனங்களும்அடைக்கப்பட்டிருந்தன.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களுடைய சக மீனவர்கள் உடனடியாகவிடுவிக்கப்படாவிட்டால் தங்கள் போராட்டம் தீவிரமடையும் என்று மீனவர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
இலங்கையின் பிடியில் 21 நாகை மீனவர்கள்:
இதற்கிடையே நாகப்பட்டினம் அருகே உள்ள கீச்சாங்குப்பத்தில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச்சென்ற 21 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர்தான் பிடித்துச் சென்றுள்ளனர் என்ற தகவல்உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் கடலுக்குள் மீன் பிடிக்கப் போன இந்த 21 மீனவர்களும் நேற்று காலையில்கீச்சாங்குப்பத்திற்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வரவே இல்லை.
இது தொடர்பாக நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டரிடம் அம்மீனவர்களின் குடும்பத்தினர் புகார்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படையினர்தான் இந்த 21 மீனவர்களையும் பிடித்துச் சென்றுள்ளனர்என்று தெரிய வந்துள்ளது.
இவர்களையும் ராமேஸ்வரம் மீனவர்களையும் சேர்த்து தற்போது மொத்தம் 46 தமிழக மீனவர்கள்இன்னும் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் தீவிரமாகமேற்கொண்டுள்ளது.


