• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈராக் ராணுவ வீரர்களுக்கு அமெரிக்கா எச்சரிகை

By Staff
|

வாஷிங்டன்:

உயிரைக் காத்துக் கொள்ள வேண்டுமானால் ராணுவத்தில் இருந்து உடனடியாக விலகும்படி ஈராக்கிய வீரர்களுக்குஅமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில நாட்களாக ஈராக்கின் விமான எதிர்ப்பு ரேடார்- ஏவுகணைகளை அமெரிக்க- பிரிட்டன் போர் விமானங்கள்தாக்கி வருகின்றன. இன்றும் அதே போல தாக்குதல் நடந்தது. அப்போது அமெரிக்க போர் விமானங்களில்இருந்து சுமார் 7 லட்சம் துண்டுப் பிரசுரங்களும் ஈராக் மீது வீசப்பட்டன.

அரேபிய மொழியில் அச்சடிக்கப்பட்டுள்ள அந்த பிரசுரங்களில்,

நாங்கள் ஈராக்கிய மக்களின் எதிரிகள் அல்ல. சதாம் ஹூசேனைத் தான் எதிர்க்கிறோம். ஈராக்கிய வீரர்களேஉங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இதனால் உடனே ராணுவத்தைவிட்டு விலகுங்கள். வீடுகளில்போய் உங்கள் குடும்பத்தை கவனியுங்கள்.

உங்கள் கமாண்டர்கள் சொன்னாலும் பேரழிவை ஏற்படுத்தும் அணு, ரசாயன, உயிரியல் ஆயுதங்களைப் போரில்பயன்படுத்தாதீர்கள். ஆறுகள், கடலில் கண்ணிவெடிகளை பரப்பாதீர்கள். கடலுக்குள் பெட்ரோலியத்தைக்கொட்டாதீர்கள்.

எங்களது ரேடியோவைக் கேளுங்கள். உங்களுக்கு உதவும் பல யோசனைகளை அதில் ஒலிபரப்பி வருகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த ரேடியோ அலைவரிசையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

படைகளை அல்-கொய்தா தாக்கும்:

இதற்கிடையே, ஈராக்கை அமெரிக்கா தாக்கினால் அமெரிக்காப் படைகளை அல்-கொய்தா தீவிரவாதிகள்தாக்குவார்கள் என சமீபத்தில் கைதான ஒசானா பின் லேடனின் முக்கிய கூட்டாளியான காலித் ஷேக் முகம்மத்கூறியுள்ளார்.

ராவல்பிண்டியில் பிடிபட்ட அவர் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா ராணுவ முகாமில வைத்துவிசாரிக்கப்பட்டு வருகிறார். முன்னதாக பாகிஸ்தான் உளவுப் பிரிவினரால் இஸ்லாமாபாத்தில் வைத்து அவர்விசாரிக்கப்பட்டார்.

இந்த விசாரணையில்போது தான் இத் தகவலை காலித் தெரிவித்தாதக வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது. லேடன்,அய்மான் அல் சவாகிரி ஆகியோருக்கு அடுத்தபடியாக அல்-கொய்தாவின் 3வது முக்கியத் தலைவர் இவர் தான்என்று தெரியவந்துள்ளது.

மேலும் அல் சவாகாரி இப்போது வளைகுடாவில் பாதுகாப்புடன் இருப்பதாகவும், லேடன் பாகிஸ்தான்- ஆப்கான்எல்லையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் உளவுப் பிரிவினரிடம் காலித் கூறுகையில்,

ஈராக்கைத் தாக்கினால் வளைகுடாவில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் மீது அல்-கொய்தா பயங்கரமாகதற்கொலைத் தாக்குதல்களை நடத்தும். இதனால் அமெரிக்காவுக்கு பெரும் உயிர்ச் சேதம் ஏற்படும்.

போர் தொடங்கட்டும். நாங்கள் யார் என்பதைக் காட்டுகிறோம். சவுதி, கத்தார், குவைத் ஆகிய நாடுகளில் இருந்துஅமெரிக்காவுக்கு மிக கெட்ட சாவு செய்திகள் வரும். எந்தவிதமான தாக்குதலை லேடன் திட்டமிட்டிருக்கிறார்என்று எனக்கே கூட தெரியாது.

அமெரிக்காவுக்கு இப்படி ஊதுகுழலாக செயல்படும் உங்களை நினைத்து வேதனைப்படுகிறேன் (விசாரணைஅதிகாரியை நோக்கிக் காலித் கூறியது). நீங்கள் உண்மையான முஸ்லீமாக வாழுங்கள். அமெரிக்கர்கள் இனிநிம்மதியாக இருக்கவே முடியாது என்று கூறியுள்ளார் காலித்.

இவரை விசாரிப்பதே மிகக் கடினமாக இருந்ததாக பாகிஸ்தானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இவர் அளித்த தகவலை வைத்து வசீர்ஸ்தான் உள்ளிட்ட சில ஆப்கான் எல்லைப் புற மாகாணங்களில் பின்லேடனைத் தேடும் பணியில் அமெரிக்க, பாகிஸ்தான் படைகள் ஈடுபட்டுள்ளன.

முஷாரபின் கவலை:

இதற்கிடையே இந்த இக்கட்டான நேரத்தில் ஏன் தான் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்ஆனாமோ என்று பாகிஸ்தான் வெறுப்படைந்துள்ளது. இந்தக் கவுன்சிலில் 5 உறுப்பினர்கள் நிரந்தரமாகவும், 10உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் உறுப்பினர்களாக இருப்பர்.

இப்போது பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்க-பிரிட்டன் ஒரு அணியாகவும், பிரான்ஸ்-ரஷ்யா,- ஜெர்மன்- சீனாஆகிய நாடுகள் எதிர் அணியாகவும் பிளவுபட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான், மெக்சிக்கோ உள்ளிட்ட பிற 7நாடுகளின் ஆதரவைத் திரட்டும் வேலையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவை ஆதரித்து ஈராக் தாக்குதலை ஆதரித்தால் தனது ராணுவத்திலேயே தனக்கு எதிர்ப்பு வரும் எனபாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரான முஷாரப் நினைக்கிறார். மேலும் நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பும்.

அமெரிக்காவை எதிர்த்தால் தனது பதவியே ஆட்டம் காணும். இந்தியாவுடன் அமெரிக்கா மேலும் உறவைவலுப்படுத்தி தனக்கு பெரும் தொல்லை தரும்.

இதனால் இந்த நேரத்தில் போய் ஏன் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் ஆனோம் என்று நொந்து போய்இருக்கிறேன் என முஷாரப் அமெரிக்காவின் ஏ.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சி.என்.என். டிவிக்கு அளித்த பேட்டியில் , நான் குழம்பிப் போய் இருக்கிறேன். எக் காரணம் கொண்டும் ஈராக்மீதான தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் பங்கேற்காது. அதைச் செய்தால் எனக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பும்என்று கூறியுள்ளார்.

ஐ.நாவுக்கு புஷ் எச்சரிக்கை:

இதற்கிடையே ஈராக்கைத் தாக்க உங்களது அனுமதி தேவையில்லை என ஐக்கிய நாடுகள் சபையிடம் அமெரிக்கஅதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் அவர் அளித்த பேட்டியில், பேச்சுவார்த்தைகள், இழுத்தடிப்பு போன்றவற்றை அமெரிக்காஇனியும் பொறுத்துக் கொள்ளாது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஈராக்கைத் தாக்கும் எங்கள் இரண்டாவதுதீர்மானத்துக்கு ஆதரவு தர வேண்டும்.

அனுமதி கிடைக்காவிட்டாலும் போர் உறுதி. இது அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை. இதனால்யாருடைய அனுமதியையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X