• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹெலிகாப்டர் பயணங்களும் மண்ணெண்ணெய் அடுப்புகளும்

By Staff
|

சென்னை:

மண்ணெண்ணெய் அடுப்பு, மூன்று சக்கர சைக்கிள், அயர்ன் பாக்ஸ் இதைத் தருவதற்காக முதல்வர் ஜெயலலிதாஹெலிகாப்டரில் ஊர் ஊராகச் சுற்ற வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசு நலத் திட்டங்களைத் தொடங்க மாவட்டம்தோறும் பயணம் மேற்கொண்டு வருகிறார் ஜெயலலிதா. இதற்காகதனி ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருகிறார். இந்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக அவர் செல்லும்இடங்களில் எல்லாம் லட்சக்கணக்கான செலவில் ஹெலிபேட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு காரணங்களால் இவை பெரும்பாலும் ஊருக்கு வெளியே அமைக்கப்படுவதால் அங்கிருந்து ஊருக்குள்வர புதிய சாலைகள் லட்சக்கணக்கான செலவில் அமைக்கப்படுகின்றன. மாபெரும் பந்தல்கள், ஏ.சி. வசதி கொண்டமேடைகள் அமைக்கப்படுகின்றன. இது தவிர ஜெயலலிதா தங்குவதற்காக அரசு கெஸ்ட் ஹவுஸ்கள் சீரமைப்பும்நடக்கிறது.

கெஸ்ட் ஹவுஸ்களில் டைல்சை எடுத்துவிட்டு பச்சை கிரானைட் டைல்ஸ்கள் அமைக்கப்படுகின்றன. பச்சைவார்னிஷ் அடிக்கப்படுகிறது. அந்த கெஸ்ட் ஹவுசுக்கு தார் சாலை அமைக்கப்படுகிறது. மொத்தத்தில்ஜெயலலிதாவின் பயணத்துக்கு ரூ. 2 கோடி வரை செலவாவதாகத் தெரிகிறது.

திண்டுக்கல் நகரில் இன்று ஜெயலலிதாவின் பயணத்துக்காக தார்ரோடு, ஹெலிபேட், கெஸ்ட்ஹவுஸ் புதுப்பிப்பு,புதிய விளக்குகள் அமைப்பது, குழாய்கள் போடுவது, ஏ.சிக்கள் பொறுத்துவது ஆகிய காண்ட்ராக்டகள் அதிமுகஎம்.பி. திண்டுக்கல் சீனிவாசனின் மகன்களுக்குத் தரப்பட்டுள்ளது.

சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த காண்ட்ராக்ட் தரப்பட்டுள்ளது. இதில் சீனிவாசன் கொழுத்தலாபம் அடைந்துள்ளார்.

இவ்வாறு ஏகப்பட்ட ஆடம்பரத்துடன் நடத்தப்படும் விழாக்களில் ஏழைகளுக்கு கரி சலவைப் பெட்டி, இலவசதையல் எந்திரம், மண்ணெண்ணெய் அடுப்பு, மூன்று சக்கர சைக்கிள், மனைப்பட்டா, 300 ரூபாய்க்கு முதியோர்பென்சன் போன்ற மாபெரும் உதவிகள் தான் வழங்கப்பட்டு வருகின்றன.

இது தவிர 100 கோடி குடிநீர்த் திட்டம், 50 கோடி சாலை அமைப்புத் திட்டம் என அடிக்கல்கள் தான்நாட்டப்படுகின்றன.

ராமதாஸ் எதிர்ப்பு:

இதை ராமதாஸ் கண்டித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக அரசை தேர்தல் கமிஷன் திட்டுகிறது. நீதிமன்றமும் திட்டுகிறது. ஆனால், தனது தவறுகளை முதல்வர்ஜெயலலிதா திருத்திக் கொண்டதாகத் தெரியவில்லை. நிதி இல்லை என்று கூறி பல திட்டங்களையும் முடக்கிப்போட்டுள்ள ஜெயலலிதாவுகுக்கு ஹெலிகாப்டரில் சுற்ற மட்டும் பணம் ஏது?.

வறட்சியில் மக்கள் சோறு கூட இல்லாமல் அல்லாடும் நிலையில் ஆடம்பர விழாக்கள் எதற்கு? மக்களின்வரிப்பணத்தை தண்ணீர் மாதிரி செலவழித்து ஹெலிகாப்டர்களில் பறந்து போய் மண்ணெணெய் அடுப்பையும்,தையல் எந்திரத்தையும், முதியோர் பென்சனையும் தர வேண்டுமா?

அதிமுகவினர் புகார் கூறுகிறார்கள் என்பதற்காக அதிகாரிகளைப் போட்டு பந்தாடிக் கொண்டிருக்கிறார்ஜெயலலிதா. இப்படி இருந்தால் எந்த அதிகாரி தான் செயல்படுவார். கொஞ்சமாவது பொறுப்புடன் நடந்துகொள்ள ஜெயலலிதா முயல வேண்டும். என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

ஊருக்கு ஒரு கதை சொல்லும் ஜெ.:

தான் செல்லும் மாவட்டங்களில் எல்லாம் குட்டிக் கதைகள் சொல்லி எதிர்க் கட்சிகளை விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளார்முதல்வர் ஜெயலலிதா.

இது பெரம்பலூர் கதை:

பெரம்பலூரில் நடந்த விழாவில் நாட்டைக் கெடுப்பதில் தந்தையையே பிள்ளைகள் மிஞ்சி விடுவார்கள் போலிருக்கிறது என்று திமுகதலைவர் கருணாநிதி, ஸ்டாலின், அழகிரியை கடுமையாகத் தாக்கிப் பேசினார் முதல்வர் ஜெயலலிதா.

ஜெயலலிதா பேசுகையில்,

இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்கள் எல்லாம் எப்படி நடந்து கொண்டனர் என்பது பற்றி நான் தனியாக உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை.

சோழச் சக்கரவர்த்தியான ராஜராஜ சோழனின் மகனான முதலாம் ராஜேந்திரனும் தந்தையைப் போலவே பெரும் வீரனாகவிளங்கினான். தஞ்சாவூரில் தந்தை கட்டிய பிரகதீஸ்வரர் கோவிலுக்கு இணையாக, கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு பெரியகோவிலைக் கட்டினான். ஆனாலும் அதில் ஒரு எச்சரிக்கை. தந்தை கட்டிய கோவிலை விட இது பெரிதாக இருந்து விடக் கூடாதுஎன்பதில் தீர்மானமாக இருந்தான் முதலாம் ராஜேந்திரன்.

இன்றோ அப்பாவைவிடத் தன் பெயரே பெரிதாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற மகன்கள் உண்டு. நல்ல செயல்களைச்செய்வதில் அப்படி ஒரு போட்டி இருந்தால் கூடப் பரவாயில்லை. ஆனால், தீமை செய்வதில்தான் அவர்கள் போட்டி போட்டுவருகின்றனர்.

நாட்டைக் கெடுப்பதில் தந்தை எட்டடி பாய்ந்தால் பிள்ளைகள் பதினாறு அடி பாய்கின்றனர்.

போகிற போக்கைப் பார்த்தால் தந்தையை விட அவருடைய மகன்கள் மிஞ்சிவிடுவார்கள் போல தோன்றுகிறது.

இது திண்டுக்கல் கதை:

இன்று திண்டுக்கல் அரசு விழாவில் பரமார்த்த குரு கதையைக் கூறி எதிர்க் கட்சிகளைக் சாடினார்ஜெயலலிதா.

முன்னொரு காலத்தில் வாழ்ந்த பரமார்த்த குருவுக்கு 18 சீடர்கள் இருந்தனர். அந்தச் சீடர்கள்அனைவரும் சேர்ந்து தங்கள் குருவுக்கு குதிரை ஒன்றை வாங்கிப் பரிசளிக்கத் தீர்மானித்தனர்.

குதிரை வாங்குவதை விட குதிரை முட்டையை வாங்கினால் தரமான குதிரை கிடைக்கும் என்றுநினைத்த அந்தச் சீடர்களில் இரண்டு பேர் குதிரை முட்டை வாங்கச் சென்றனர். ஒரு ஊரில் பெரியஅளவில் வெள்ளை நிறத்தில் குவிக்கப்பட்டிருந்த பூசணிக்காயைக் குதிரை முட்டை என்று கருதியஅவர்கள் அதை விலை கொடுத்து வாங்கிக் கொண்டு திரும்பினர்.

இரவு நேரம் ஆகிவிட்டதால் வழியில் காட்டிலிருந்த ஒரு மரத்தின் மேல் அந்த இரண்டு சீடர்களும்ஏறி உட்கார்ந்து கொண்டனர். அரைகுறைத் தூக்கத்தில் அவர்கள் இருந்தபோது திடீரென்று அந்தப்பூசணிக்காய் அவர்கள் கையிலிருந்து கீழே விழுந்தது.

உடனே திடுக்கிட்டு எழுந்த அந்த சீடர்கள் கீழே பார்த்தபோது பூசணிக்காய் விழுந்த இடத்திலிருந்துமுயல் குட்டி ஒன்று பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது. உடனே அவர்கள் முட்டை உடைந்து குதிரைதான்ஓடுகிறது என்று நினைத்து அதைத் துரத்தினார்கள். ஆனால் அது அவர்களிடம் சிக்கவில்லை.

வெறும் கையுடன் திரும்பி வந்த சீடர்கள் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் தங்கள் குருவிடம்கூறினார்களாம். அதைக் கேட்ட பரமார்த்த குரு, நல்ல வேளை நான் அந்தக் குதிரைக் குட்டியின் மீதுசவாரி செய்திருந்தால் என் கதி என்னவாகி இருக்கும் என்று சொன்னாராம்.

இதுபோன்ற "புத்திசாலிகள்" இந்தக் காலத்திலும் உள்ளனர். அவர்கள் யார் என்று நான் உங்களுக்குச்சொல்லத் தேவையில்லை. அவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை?

நான் கோபக்காரி என்று பலரும் கூறி வருகிறார்கள். என்னைத் தற்காத்துக் கொள்ளும்பொருட்டுதான் நான் கோபப்படுவேனே தவிர, இயற்கையிலேயே நான் ஒரு அமைதியான பெண்ன்றார் ஜெயலலிதா.

டயர் "பஞ்சர்":

முன்னதாக திருச்சியிலிருந்து பெரம்பலூருக்கு செல்லவிருந்த ஜெயலலிதா, ஹெலிகாப்டரின் முன்பக்க டயர் பஞ்சர் ஆகியதால் சுமார் 1 மணி நேரம் தமாதமாகத்தான் பெரம்பலூர் சென்றார்.

டயர் பஞ்சரானதைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்திலேயே ஜெயலலிதா காத்திருந்தார்.வேறொரு டயர் வரவழைக்கப்பட்டு பொருத்தப்பட்ட பின்னரே அவருடன் ஹெலிகாப்டர்பெரம்பலூருக்குக் கிளம்பிச் சென்றது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X