For Daily Alerts
Just In
32 இந்திய மீனவர்களை பிடித்துச் சென்றது பாகிஸ்தான்
கராச்சி:
தங்கள் நாட்டு கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி 32 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடலோரக் காவல்படையினர் கைது செய்துள்ளனர்.
தெற்கே இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாக சமீபத்தில் 118 தமிழக மீனவர்களை அந்நாட்டு மீனவர்கள்கடத்திச் சென்று தங்கள் நாட்டு கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்தச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே மேற்கே அரபிக் கடலில் இந்திய மீனவர்களிடம்பாகிஸ்தான் தன் கைவரிசையைக் காண்பித்துள்ளது.
குஜராத் பகுதியைச் சேர்ந்த 32 மீனவர்கள் தங்கள் கடல் பகுதிகளில் மீன் பிடித்ததாகக் கூறி அவர்களை பாகிஸ்தான்கடலோரக் காவல் படையினர் கைது செய்து அந்நாட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த மீனவர்கள் இன்று கராச்சியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.


