For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அயோத்தி: அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கின

By Staff
Google Oneindia Tamil News

அயோத்தி:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததா என்பதைக் கண்டறியும்அகழ்வாராய்ச்சிப் பணியைத் தொல்பொருள் ஆய்வாளர்கள் தொடங்கியுள்ளனர். முதல் கட்டமாகஅந்த நிலத்தை சர்வே செய்யும் பணி இன்று தொடங்கியது.

அயோத்தியில் ராமர் கோவிலை இடித்துவிட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டதா என்பதைக்கண்டறிய அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்து அகழ்வாராய்ச்சி நடத்துமாறு மத்திய அரசுக்குஅலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 5ம் தேதி உத்தரவிட்டது.

மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை மூலம் அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்தப் பணிகள்தொடங்கப்பட்டு, ஒரு மாதத்திற்குள் ஆய்வுகளை முடித்து அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் ஆய்வுப் பணிகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்து வரும் 24ம் தேதி இடைக்காலஅறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி தொல்பொருள் ஆய்வுத் துறையைச் சேர்ந்த டாக்டர் பி.ஆர். மணி தலைமையிலான 12நிபுணர்கள் நேற்று மாலை அயோத்திக்கு வந்து சேர்ந்தனர். இவர்களில் 10 பேர் மத்தியதொல்பொருள் துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மற்ற இரண்டு பேரும் தோஜோ-விகாஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். இந்தநிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அயோத்தி நிலத்தில் ராடார் கருவி மூலம் ஆய்வு நடத்தி கீழேகட்டட சிதைவுகள் இருப்பதாகக் கூறியிருந்தது.

இந்த 12 பேரையும் தவிர மேலும் 4 நிபுணர்கள் இன்று மாலை அயோத்திக்கு வந்து சேருவார்கள்என்று தெரிகிறது.

நேற்று மாலை 12 நிபுணர்களும் அயோத்தி அமைந்துள்ள பைசாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த உயர்அதிகாரிகளுடன் சுமார் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் இன்று காலை 12 தொல்பொருள் ஆய்வு நிபுணர்கள் தங்களுடைய அகழ்வாராய்ச்சிப்பணிகளைத் தொடங்கினர். சர்ச்சைக்குரிய இடம் முழுவதையும் அவர்கள் இன்று "சர்வே" மட்டும்எடுத்தனர். சுமார் இரண்டரை மணி நேரம் இந்த "சர்வே" எடுக்கும் பணி நடைபெற்றது.

நாளையும் அந்த இடத்தில் "சர்வே" எடுக்கும் பணிகள்தான் நடைபெற உள்ளன.அகழ்வாராய்ச்சிக்காக அந்த இடத்தைத் தோண்டும் பணி நாளை மறுநாள்தான் தொடங்க உள்ளது.

இதையடுத்து அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏராளமான மத்திய ரிசர்வ்போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். தொல்பொருள் துறை நிபுணர்களுக்கும் பலத்த பாதுகாப்புஅளிக்கப்பட்டுள்ளது.

அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்திற்குள் பார்வையாளர்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் ஜெயின் கோவில் இருந்ததாகவும், இந்த அகழ்வாராய்ச்சின் மூலம் 6ம் நூற்றாண்டில்கட்டப்பட்ட ஜெயின் ஆலயத்தின் சிதைவுகளைக் கண்டுபிடிக்க முடியும் என அந்த மதத் தலைவர்கள்கூறியுள்ளனர். இதை இடித்துவிட்டுத் தான் மசூதி கட்டப்பட்டதாக இவர்கள் கூறுகின்றனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X