• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஈராக்: பிரிட்டன் அமைச்சர் ராஜினாமா மிரட்டல்

By Staff
|

லண்டன்:

அமெரிக்காவுடன் சேர்ந்து ஈராக்கைத் தாக்கும் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேரின் முடிவுக்கு அவரது கட்சியிலும்அரசிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டோனி பிளேரின் முடிவை எதிர்த்து வெளியுறவு வளர்ச்சித்துறைஅமைச்சரும் மூத்த எம்.பியுமான அமைச்சர் கிளார் சார்ட் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாகஎச்சரித்துள்ளார்.

நேற்று பிளேரின் தொழிலாளர் கட்சியின் மூத்த எம்.பியான ஆண்டி ரீட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.தனது சுற்றுச்சூழல்துறை ஆலோசகர் பதவியில் இருந்து அவர் விலகினார். அநியாயமான முறையில் ஈராக்கைத்தாக்க அமெரிக்கா முயல்வதாகவும், அதை பிரிட்டன் ஆதரிப்பது கேவலம் என்றும் அவர் கருத்துத்தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா. ஆயுதக் கண்காணிப்பாளர்களுக்கு போதிய கால அவகாசமே தராமல், அந்நாட்டு பெட்ரோலிய வளத்தைக் கைப்பற்ற ஈராக்கைத் தாக்குவதிலேயே அமெரிக்கா குறியாக இருப்பதாக அவர்தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து மேலும் 200 எம்.பிக்களும் பதவி விலகத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தபரபரப்பான நிலையில் கேபினட் அமைச்சர் அந்தஸ்தில் உள்ள வெளியுறவு வளர்ச்சித்துறை அமைச்சர் கிளார் சார்ட்தனது ராஜினாமா மிரட்டலை விடுத்துள்ளார்.

ஐ.நாவின் அனுமதி இல்லாமல் ஈராக்கைத் தாக்கும் அமெரிக்காவுக்கு பிரிட்டன் துணை நின்றால் நான் நிச்சயம்பதவி விலகி விடுவேன் என பி.பி.சி. ரேடியோவிடம் அவர் தெரிவித்தார். ஈராக் விஷயத்தில் ஐ.நா. தான் எந்தமுடிவையும் எடுக்கலாம். அமெரிக்காவுக்கு அந்தக் தகுதியே கிடையாது என்றார்.

1991ம் ஆணடு ஈராக்கை அமெரிக்காவுடன் சேர்ந்து பிரிட்டன் தாக்கியபோது தனது எதிர்க் கட்சி எம்.பி.பதவியில் இருந்து பதவி விலகியவர் சார்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நாவா? அமெரிக்க காங்கிரசா?:

இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் அனுமதி கிடைக்காவிட்டாலும் அமெரிக்க நாடாளுமன்றத்தின்அனுமதி இருப்பதால் ஈராக்கைத் தாக்குவோம் என அந் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல்கூறியுள்ளார்.

இதன்மூலம் அமெரிக்க நாடாளுமன்றம் ஐ.நாவைவிட விடவும் முக்கியமானது என்ற கருத்தை பாவல்தெரிவித்துள்ளார். எங்களுக்கு அமெரிக்க மக்களின் அனுமதி தான் முக்கியம் என்றார்.

ரஷ்யா, ஜெர்மனி மீண்டும் எதிர்ப்பு:

இந் நிலையில் ஈராக்கைத் தாக்கும் அமெரிக்காவின் திட்டத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் பிரஞ்ச் அதிபர்ஜாக்குஸ் சிராக்கும் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நேற்று இருவரும் தொலைபேசி மூலம் ஈராக் விவகாரம் குறித்து விவாதித்தனர்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்ல் அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிராக வீடோ அதிகாரத்தை ரஷ்யாபயன்படுத்தாது என்ற தகவல்கள் பரவியதையடுத்து பிரஞ்ச் அதிபர் தொலைபேசி மூலம் புடினைத் தொடர்புகொண்டார்.

அப்போது அமெரிக்காவுக்கு தனது எதிர்ப்பை ரஷ்ய அதிபர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஈராக் கவலை:

ஐ.நாவின் உத்தரவை ஏற்று நாங்கள் ஏவுகணைகளையும், ஆயுதங்களையும் அழித்தாலும் எங்களை அமெரிக்காதாக்குவது உறுதியாகிவிட்டது. இதனால், ஐ.நா. ஆயுதக் கண்காணிப்பாளர் ஹேன்ஸ் பிலிக்ஸ் மீண்டும் ஈராக்குக்குவர வேண்டும் என அந் நாடு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ஈராக் அதிபர் சதாம் ஹூசேனின் ஆலோசகர் அமீன் கூறுகையில்,

எங்களிடம் அணு ஆயுதம், ரசாயன, உயிரியல் ஆயுதங்கள் இல்லை என்பதை ஐ.நா. உறுதி செய்துவிட்டது.ஆனாலும் அமெரிக்காவும் பிரிட்டனும் தொடர்ந்து பொய் சொல்லி வருகின்றன. எந்தவிதமான கேள்விகளுக்கும்விளக்கமளிக்க நாங்கள் தயார். இதனால் தான் பிலிக்ஸை மீண்டும் வரச் சொல்கிறோம் என்றார்.

போருக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. நாளை மதுரையில்மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஈராக் தாக்குதலுக்கு எதிராகஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளன.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X