For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவுக்கு தலை வணங்க மாட்டோம்: ஈராக் அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

பாக்தாத்:

அமெரிக்கா எங்களைத் தாக்கினால் கடைசி குண்டு காலியாகும் வரை தீவிரமான எதிர்த் தாக்குதல்நடத்துவோம் என்று ஈராக் கூறியுள்ளது.

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கெல்லாம் நாங்கள் பயந்துவிடப் போவதில்லை என்று கூறியஈராக் துணைப் பிரதமர் தாரிக் அசிஸ், எங்களின் கடைசி வீரனும், கடைசி துப்பாக்கிக் குண்டும்இருக்கும் வரை எதிரியை எதிர்த்து போராடுவோம்.

ஈராக்கைச் சுற்றி அமெரிக்காவும் பிரிட்டனும் எவ்வளவு படைகளைக் குவித்தாலும் எங்களுக்குக்கவலை இல்லை. எங்கள் ராணுவத்தினரும் மக்களும் எதற்கும் தயாராகவே உள்ளனர். எங்கள்நாட்டிலுள்ள முக்கியமான பாலங்களை நிச்சயம் அமெரிக்கர்கள் தகர்க்க முயற்சிப்பார்கள் என்றுதெரியும். ஆனால் அவற்றைப் பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள்எடுத்துள்ளோம்.

இருந்தாலும் ஈராக்கையோ தலைநகர் பாக்தாத்தையோ அவ்வளவு எளிதாக அமெரிக்கப்படையினரால் கைப்பற்றிவிட முடியாது. நாங்கள் அமெரிக்காவுக்குத் தலை வணங்க மாட்டோம்என்றார் தாரிக் அசிஸ்.

காலி செய்யும் ஐ.நா:

இதற்கிடையே ஈராக்- குவைத் எல்லைப் பகுதிகளில் நிலைமையைக் கண்காணித்து வந்த ஐக்கிய நாடுசபை பார்வையாளர்கள் அங்கிருந்து வெளியேற ஆரம்பித்துள்ளனர். போர் தொடங்குவதுஉறுதியாகிவிட்டதால் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுமாறு ஐ.நா. சபை உத்தரவிட்டுள்ளது.

ரஷ்யா திட்டவட்ட எதிர்ப்பு:

இந்நிலையில் ஈராக் மீது தாக்குதல் தொடுக்க அமெரிக்கா கொண்டு வந்துள்ள இரண்டாவதுதீர்மானத்தை தங்களுடைய "வீட்டோ" அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்வோம் என ரஷ்யா,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உறுதியாகத் தெரிவித்துள்ளன.

இதுவரை வீடோ அதிகாரத்தைப் பயன்படுத்துவது குறித்து பிரான்ஸ் மட்டுமே பேசி வந்தது.இப்போது முதல்முறையாக ரஷ்யாவும் வீடோவை பயன்படுத்தப் போவதாகக் கூறியுள்ளது.

அமெரிக்காவுக்கு பல்கேரியா ஆதரவு:

அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் ஸ்பெயினும் சேர்ந்து கொண்டு நேற்று இரண்டாவதுதீர்மானத்தைத் தாக்கல் செய்தன. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தரப் போவதாக பல்கேரியாகூறியுள்ளது. ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் இந்த நாடும் ஒரு தாறாகாலிக உறுப்பு நாடாகும்.

இதற்கிடையே ஸ்பெயின் தங்களுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வந்துள்ளதற்கு ஈராக் கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. நட்பு நாடு என்று சொல்லிக் கொள்ளும் ஸ்பெயின் ஏன் அமெரிக்கா,பிரிட்டனுடன் சேர்ந்து கொண்டு தங்களை எதிர்க்க வேண்டும் என்று புரியவில்லை என ஈராக்கூறியுள்ளது.

புஷ்- சீன அதிபர் பேச்சு:

தங்களுடைய தீர்மானத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று கோரி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்கு தொலைபேசியில் கோரிக்கை விடுத்து வருகிறார்.

சீன அதிபர் ஜியாங் ஸெமினுக்கும் புஷ் நேற்று டெலிபோனில் பேசினார். அப்போது பேசியஜியாங், போரைத் தவிர்ப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்றுபுஷ்சிடம் வலியுறுத்தினார்.

அதேபோல் ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்த கருத்துடன்தீர்மானத்தை நிறைவேற்றுவதே சரி என்றும் ஜியாங் கூறியுள்ளார்.

பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ரஷ்யா ஆகியவற்றுக்கு ஆதரவாகத்தான் சீனா உள்ளது.

ஈராக்கில் 50 இந்தியர்கள்:

இதற்கிடையே ஈராக் போர் குறித்து பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம்டெல்லியில் நடந்தது.

ஐ.நா. தீர்மானம் நிறைவேறாத பட்சத்தில் ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக் கூடாது என்றுஅரசு கூறியுள்ளது. ஆனால், அமெரிக்காவை கண்டிக்கவில்லை. மத்திய அரசின் இந்த நிலைக்குஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கடும் கண்டனம் எழுந்தது.

அமெரிக்காவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க் கட்சிகள்கூறியதை வாஜ்பாய் நிராகரித்தார்.

இதனால் பா.ஜ.க. அரசையே அமெரிக்கா தான் நடத்துவதாக தங்களுக்கு சந்தேகம் எழுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

ஆனால், அதை வாஜ்பாய் சட்டை செய்யவில்லை. அமெரிக்காவை எதிர்த்துக் கொண்டு தான்இருக்கிறோம் என்று கூறிய வாஜ்பாய், போர் தொடங்கும்பட்சத்தில் ஈராக்கில் உள்ள 50இந்தியர்களையும் (இவர்களில் பெரும்பாலானவர்கள் தூதரக ஊழியர்கள்) பத்திரமாக அழைத்துவந்துவிடுவோம் என்றார்.

இன்று பா.ஜ.க. எம்.பிக்கள் கூட்டத்தில் பேசிய வாஜ்பாய், ஈராக் போரை இந்தியா விரும்பவில்லைஎன்றார்.

வோட்டெடுப்பு தாமதமாகலாம்:

ரஷ்யாவும் பிரான்சும் வீடோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கத் தீர்மானத்தை ரத்து செய்யப் போவதாக மிரட்டியுள்ளதால்ஓட்டெடுப்பைத் தள்ளிப் போட அமெரிக்கா முயன்று வருகிறது. இன்று ஓட்டெடுப்பு நடப்பதாக இருந்தது.

ஆனால், தனக்கு இன்னும் போதிய ஆதரவு கிடைக்காததால், ரிஸ்க் எடுக்க அமெரிக்கா விரும்பவில்லை. இந்த மாதம் 17ம்தேதிக்குள் ஆயுதங்களை ஒழிக்காவிட்டால் ஈராக்கைத் தாக்குவோம் என அமெரிக்க- பிரிட்டன் அரசுகள் அறிவித்துள்ளன.இனறு காலைக்குள் தங்களுக்கு ஆதரவாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் 6 தாற்காலிக உறுப்பு நாடுகளை மடக்கி விடலாம் எனஎதிர்பார்த்தன.

ஆனால், பல்கேரியா தவிர எந்த நாடும் ஆதரவு தரவில்லை.

பாகிஸ்தான் நடுநிலை:

இந்த ஓட்டெடுப்பில் நடுநிலை வகிக்கக் போவதாக அமெரிக்காவின் தீவிர நட்பு நாடான பாகிஸ்தானும் அறிவித்துவிட்டது.ஈராக் விஷத்தில் அமெரிக்காவை ஆதரித்து ஓட்டு போட்டால் நான் பாகிஸ்தானுக்குள்ளேயே இருக்க அதன் ராணுவ ஆட்சியாளர்பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களிக்க பர்வேஸ் முடிவு செய்தாலும் கூட அதை நாடாளுமன்றம் ஏற்காது என பாகிஸ்தான்பிரதமர் ஜமாலி கூறிவிட்டார். இதனால் நடுநிலை வகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இந்த நடுநிலை அறிவிப்பு அமெரிக்காவை எரிச்சலாக்கியுள்ளது. இதனால் தங்கள் தீர்மானம் தோற்பதுஉறுதியாகிவிட்டதால் ஓட்டெடுப்பை ஒத்தி வைக்குமாறு ஐ.நாவிடம் அமெரிக்கா கூறிவிட்டது. அடுத்த வாரத்தில் இந்தஓட்டெடுப்பை நடத்தலாம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

ஆளில்லா விமானம்...

இதுவரை ஈராக்கின் ரசாயன ஆயுதங்கள், அல்-சமத் ஏவுகணைகள் பற்றி மட்டும் பேசி வந்த அமெரிக்கா இப்போதுஈராக்கிடம் ஆளில்லாமல் இயங்கும் விமானங்கள் இருப்பதாகவும் அதை அந் நாடு மறைத்து வைத்திருப்பதாகவும் கூறியுள்ளது.

இது தவிர ஸ்கட் ரக ஏவுகணைகளையும் ஏராளமான அளவில் ஈராக் மறைத்து வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவுக்கு கோபி அன்னான் எதிர்ப்பு:

இந் நிலையில் இதுவரை இந்த விவகாரத்தில் அமைதி காத்து வந்த ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னாள் முதன்முறையாகஅமெரிக்காவுக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதி இல்லாமல் ஒருதலைப்பட்சமாக ஈராக்கை அமெரிக்கா தாக்குவது சர்வதேச விதிகளுக்குமுரணானது. அதை அமெரிக்கா போன்ற நாடு செய்வது நல்லதுமல்ல. இதனால் பாலஸ்தீன பிரச்சனை மேலும் சிக்கலாவதோடு,தீவிரவாதத்துக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளும் பாழ்படும் என்றார்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X