சாத்தான்குளம் மக்களுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா ஜெ.?
திருநெல்வேலி:
வரும் 14ம் தேதி சாத்தான்குளத்திற்கு வருகை தரும் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தின்போது அத்தொகுதி மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக சில முக்கியஅறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த மாதம் நடந்த சாத்தான்குளம் இடைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ்கோட்டை என்று கருதப்பட்ட சாத்தான்குளத்தில் அதிமுக வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணம்,பிரசாரத்தின்போது ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகள்தான் என்று கருதப்படுகிறது.
மகளிர் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் விளையாட்டு வளாகம் ஆகியவற்றைக் கட்டித் தருவேன்என்று ஜெயலலிதா தந்த உறுதிமொழிகள் அப்பகுதி மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் 14ம்தேதி ஜெயலலிதா சாத்தான்குளத்திற்குச் செல்கிறார். தூத்துக்குடி மாவட்ட அரசுவிழா முதலில் மாவட்டத்தின் தலைநகரில்தான் நடைபெற இருந்தது. ஆனால் சாத்தான்குளத்தில்அதிமுக வெற்றி பெற்ற பின்னர் அரசு விழாவை இங்கு மாற்றி விட்டார் ஜெயலலிதா.
நலத் திட்டங்களைத் துவக்கி வைத்து விட்டு, சாத்தான்குளம் தொகுதி மக்களுக்கு அளித்தவாக்குறுதிகள் தொடர்பான பல அறிவிப்புகளையும் அவர் வெளியிடுவார் என்று தெரிகிறது.
சசியுடன் ஜெ. "ஷாப்பிங்":
இதற்கிடையே பல்வேறு மாவட்ட அரசு விழாக்களில் கடந்த 5 நாட்களாகக் கலந்து கொண்டஜெயலலிதா நேற்று இரவு சென்னை திரும்பினார்.
முன்னதாக நேற்று திருச்சியில் நடந்த அரசு விழாவில் ரூ.209 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைஜெயலலிதா தொடங்கி வைத்தார். பின்னர் திருச்சி மாநகராட்சிக்கான வெப்சைட்டையும்(www.trichycorporation.com) ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இதன் பிறகு திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்கநாதர் கோவிலுக்கு தன் தோழி சசிகலாவுடன்ஜெயலலிதா சென்றார். சுவாமியை வழிபட்ட பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் பூஜைதட்டுகள் உள்ளிட்ட பல பொருட்களை வாங்கினார்.
சுமார் 10 நிமிடங்கள் வரை இருவரும் "ஷாப்பிங்" செய்தனர். இதற்காகவே சசிகலா ஒரு "பிக்ஷாப்பர்" பையைக் கொண்டு வந்திருந்தார்.


