காளிமுத்து மகளுக்கு எம்.பி.பி.எஸ். சீட் ஒதுக்கியது எப்படி? நீதிமன்றம் கேள்வி
சென்னை:
தமிழறிஞரின் வாரிசு என்ற பெயரில் சபாநாயகர் காளிமுத்துவின் மகளுக்கு எம்.பி.பி.எஸ். சீட் ஒதுக்கப்பட்டதற்குசென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சில மாதங்கள் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் இருந்தபோது காளிமுத்துவின் மகள் தென்றலுக்குஎம்.பி.பி.எஸ். சீட் தர அவர் பரிந்துரைத்தார். காளிமுத்து தமிழறிஞர் என்று சொல்லி இந்த சீட் கிடைக்க வகைசெய்தார் ஓ.பி.
இதை எதிர்த்து இன்னொரு தமிழறிஞரான பாலஅறிவு என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில்,
நான் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவன். பல ஆங்கிலப் புத்தங்களையும் தமிழில் மொழிபெயர்த்தவன். பல புத்தகங்களை எழுதியவன். பாவேந்தர் விருது வென்றவன். என் மகன் கலைச் செல்வனுக்குதமிழஞரின் வாரிசு என்ற அடிப்படையில் எம்.பி.பி.எஸ். சீட் கேட்டு விண்ணப்பித்தேன்.
ஆனால், என் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. முழு நேர அரசியலில் உள்ள சபாநாயகர் காளிமுத்துவைதமிழறிஞர் என்று சொல்லி அவரது மகள் தென்றலுக்கு எம்.பி.பி.எஸ். சீட் வழங்க முதல்வராக இருந்தபன்னீர்செல்வம் உத்தரவிட்டார். காளிமுத்து தமிழுக்கு என்ன செய்தார் என்று புரியவில்லை.
முறைகேடாக அந்த சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. நியாயப்படி என் மகனுக்கே அந்த சீட் தரப்பட்டிருக்க வேண்டும்.எனவே, அந்த சீட்டை ரத்து செய்துவிட்டு என் மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் தர வேண்டும் என்றுபாலஅறிவு தன் மனுவில் கூறியிருந்தார்.
இதை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி முருகேசன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.விசாரணையின்போது அரசு வழக்கறிஞர் மாசிலாமணிக்கு நீதிபதிகள் டோஸ் விட்டனர். தேர்வுக்கமிட்டிக்கும் நீதிபதிகளிடம் இருந்து கண்டனம் கிடைத்தது.
நீதிபதிகள் கூறியதாவது:
பாலஅறிவு தமிழறிஞர் தானா என்பதையே தேர்வுக் கமிட்டி பார்க்கவில்லை. அவரதுபடைப்புகளையும் கூட பரிசீலனை செய்யவில்லை என்பது தெளிவாகிறது. காளிமுத்து மகள் எப்படிதமிழறிஞர் வாரிசு அடிப்படையில் சீட் பெற்றார்.
எப்படி அந்த சீட்டை ஒதுக்கினீர்கள். இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அடுத்த வாரம்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்வுக் கமிட்டிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


