அமெரிக்க ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 11 பேர் பலி
நியூயார்க்:
நியூயார்க் அருகே அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் 11 அமெரிக்க வீரர்கள்பலியாயானார்கள். இருவர் படுகாயத்துடன் உயிர் தப்பியுள்ளனர்.
போர்ட் டிரம் என்ற பகுதியில் உள்ள வீலர்- சேக் விமான தள பகுதியில் அமெரிக்க நேரப்படி நேற்று காலை (இந்திய நேரப்படி நேற்றிரவு)இச் சம்பவம் நடந்தது. மரங்கள் அடர்ந்த இந்தப் பகுதியில் கடும் பனிப் பொழிவுக்கு இடையே பறந்து கொண்டிருந்த இந்த ஹெலிகாப்டர்திடீரென விழுந்து வெடித்துச் சிதறியது.
இதில் 13 பேர் இருந்தனர். ஆனால், இருவர் உயிர் தப்பிவிட்டதாக மட்டும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். மற்றவர்கள் பலியானதுகுறித்து எந்தத் தகவலும் தர மறுத்துவிட்டனர். அதே நேரத்தில் மறைந்த ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்தெரிவிப்பதாகவும் மட்டும் ராணுவம் கூறியது.
ஆனால், 11 ராணுவத்தினர் பலியாகிவிட்டது நிருபர்கள் நடத்திய விசாரணையில் உறுதியானது. இதையடுத்து தான் இந்த சாவுகளைஅமெரிக்க ராணுவம் உறுதி செய்தது. மேலும் இரு ஹெலிகாப்டர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடந்திருக்கலாம்என்று தெரிகிறது. ஈராக் மீதான போருக்கான பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
பிளாக் ஹாக் என்று அழைக்கப்படும் யு.எச்.-60 என்ற இந்த ரக ஹெலிகாப்டர் அமெரிக்க ராணுவத்தின் போக்குவரத்துப் பணிகளில் அதிகஅளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


