கடலில் மீன் வலையில் சிக்கிய "புலி உடை"
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டனம் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற ஒரு மீனவரின் வலையில்விடுதலைப் புலிகளுக்கு ஆடை தைக்க பயன்படுத்தப்படும் துணியின் மூட்டை சிக்கியது.
ஜான் என்ற அந்த மீனவர் தனது படகில் கடலுக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது வலையில்ஏதோ ஒன்று சிக்கியது. மிகக கனமாக இருந்ததால் அது மிகப் பெரிய மீனாக என மகிழ்ச்சியடைந்த ஜான்வலையை இழுத்தார்.
அப்போது பெரிய மூட்டை வலையில் இருந்தது. குழப்பத்துடன் அதைப் பிரித்துப் பார்த்தார் ஜான். அதில் பச்சை,மஞ்சள் இலைகளுடன் கூடிய camouflage ரக துணியின் பெரிய பண்டல் இருந்தது.
அதை எடுத்துக் கொண்டு கோட்டைப்பட்டனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் ஜான். போலீஸார்சோதனையிட்டபோது 160 மீட்டர் நீள துணி இருப்பது தெரிந்தது.
இது விடுதலைப் புலிகள் அணியும் சீருடை தைக்க பயன்படுத்தப்படும் துணி என போலீசார் கூறுகின்றனர்.புலிகளுக்காகக் கொண்டு செல்லப்பட்ட துணி பார்சல்களில் ஒன்று தவறுதலாக கடலில் விழுந்திருக்கலாம் என்றுபோலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
41 மீனவர்களை விடுவித்தது இலங்கை:
இதற்கிடையே இலங்கையிலிருந்து மேலும் 41 தமிழக மீனவர்களை அந் நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களைஇலங்கை மீனவர்கள் கடத்திச் சென்றனர்.
அவர்களுடைய படகுகளையும் கடத்தி சேதப்படுத்தினர். தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கை கடல்எல்லைக்குள் மீன் பிடித்ததால் இச் சம்பவம் நடந்தது.
தமிழக மற்றும் மத்திய அரசுகளின் முயற்சிகளால் 91 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன்விடுவித்தது. இந் நிலையில் இப்போது மேலும் 41 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 25 பேர் நாகப்பட்டனத்தையும், 16 பேர் புதுக்கோட்டை பகுதியையும் சேர்ந்தவர்கள். அவர்களது 6இயந்திரப் படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. இவர்கள் இன்று (புதன்கிழமை) இந்திய கடலோரக்காவல்படையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.


