தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி கடும் எச்சரிக்கை
திருச்சி:
நீதித்துறையை தமிழக அரசு பாரபட்சமாக நடத்துவதாக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி கூறியுள்ளார்.
தமிழகத்தில் நிதி நிலை மோசமாக இருப்பதாகக் கூறி பல்வேறு திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. நெசவாளர்களிடம் இருந்து வேட்டி,சேலை வாங்குவது நிறுத்தப்பட்டு அவர்களை சோற்றுக்கு வழியில்லாமல் ஆக்கியது அரசு.
தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் பறிக்கப்பட்டன. இப்போது விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும் ரத்து செய்யப்படுகிறது.அதே போல மாநில அரசுத் துறைக்கு ஆட்களை வேலைக்குச் சேர்ப்பதும் நிறுத்தப்பட்டது.
ஆனால், முதல்வரால் மிகவும் விரும்பப்படுகிறது காவல்துறைக்கு மட்டும் அந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டது. நீதித்துறைக்கு கூட ஆட்கள்எடுக்கப்படுவது நிறுத்தப்பட்டது. நீதிமன்றங்களுக்கு டைப் ரைட்டர் வாங்கக் கூட பணம் தரப்படவில்லை.
இது தொடர்பாக நீதித்துறையில் இருந்து நிதித்துறைக்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்பப்பட்டன. ஆனால், நிதியில்லை என்று பதில் வந்தது.கிட்டத்தட்ட ஒரு வருடமாக அரசு இதே பதிலைச் சொல்லிக் கொண்டிருந்ததால் கடுப்படைந்த உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷண்ரெட்டி தமிழக அரசை கடுமையாக சாடினார்.
இதை ஒரு வழக்காகவே எடுத்துக் கொண்ட நீதிபதி, தமிழக அரசின் வழக்கறிஞரை அழைத்து, நீங்கள் எங்களுக்கு தர்மம் செய்யவில்லை.ஒரு அரசின் கடமையைத் தான் செய்கிறீர்கள் என முதல்வர் ஜெயலலிதாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை அனுப்பினார்.
மேலும் தொடர்ந்து காசு இல்லை என்று கூறிக் கொண்டிருந்தால் தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி நிலையை அறிவிப்போம் எனவும்எச்சரித்தார். அப்படிச் செய்தால், மாநில அரசின் நிதி நிர்வாகம் மத்திய நிதியமைச்சகத்திடம் போய்விடும். முதல்வரும் அமைச்சர்களும்சும்மா பொம்மைகளாகத் தான் ஆட்சி செய்ய முடியும்.
நேற்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி, காவல்துறைக்கு மட்டும் ஆட்களைசேர்க்கிறீர்கள். நீதித்துறைக்கு ஏன் ஆள் சேர்க்க மறுக்கிறீர்கள். ஏன் இந்த பாரபட்சம்? சம்மன் அனுப்பும் பணியாளர்களின் நியமனத்தைக்கூடச் செய்யவில்லை. அப்புறம் நீதிமன்றங்கள் எப்படிச் செயல்பட முடியும்?
தமிழகத்தில் உள்ள 6.5 கோடி மக்கள் தொகைக்கு 3,200 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால், இப்போது வெறும் 600 பேர் தான்இருக்கிறோம். இதிலும் கூட 87 நீதிபதிகளின் பதவிகள் காலியாக உள்ளன. அதை உடனே தமிழக அரசு நிரப்பு வேண்டும். இல்லாவிட்டால்நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என மீண்டும் எச்சரித்தார் நீதிபதி சுபாஷண் ரெட்டி.


