For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி தொகுதியில் கடும் குடிநீர் பஞ்சம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை சேப்பாக்கம் பகுதியில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. குடிநீர் கேட்டு இப் பகுதி பொதுமக்கள்சாலை மறியல் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

சென்னை முழுவதுமே குடிநீர்ப் பிரச்சினை தலைதூக்கத் தொடங்கியுள்ளது. கோடைகாலம் தொடங்கிவிட்டதால்நகரில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால்பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக நகரின் மையப் பகுதியில் இருப்பவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். புறநகர்ப் பகுதிமக்களுக்கு ஓரளவு பிரச்சினையில்லை. குடிநீர் பற்றாக்குறை காரணமாக ஆங்காங்கே மக்கள் காலிக் குடங்களுடன்போராட ஆரம்பித்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதியின் சட்டசபைத் தொகுதியான சேப்பாக்கத்தில் உள்ள லாக் நகரில்கடந்த 2 நாட்களாக தண்ணீரே வரவில்லை. அப்படியே வந்தாலும் மஞ்சள் நிறத்த்தில் கெட்ட வாசனையுடன்வருகிறது. இதனால் இந்த நீரைப் பயன்படுத்த நிலை உருவாகியுள்ளது.

இதனால் மக்கள் பெரும் பிரச்சனையில் சிக்கியுள்ளனர். சுகாதாரமான குடிநீரை உடனே தரக் கோரி லாக் நகர்ப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்துபாதிக்கப்பட்டது. அதிகாலைமுதல் காலை 11 மணி வரை இந்தப் போராட்டம் நடந்தது.

போலீஸ் அதிகாரிகள், மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் மிகத் தாமதமாக வந்து மக்களை சமாதானப்படுத்தினர்.கருணாநிதியின் தொகுதி என்பதால் தான் நீரை விட அதிகாரிகள் மறுப்பதாக திமுகவினர் குற்றம் சாட்டினர். இதைஅதிகாரிகள் மறுத்தனர்.

நாணயமான தொண்டன் தேவை: கருணாநிதி

திமுகவுக்கு நாணயமாக தொண்டர்கள் தான் தேவை என அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார்.

இன்று அண்ணா அறிவாலயத்தில் மறைந்த திமுக தொண்டர் அணி செயலாளர் தமிழ்ப்பித்தனின் மகன்திருமணத்தை நடத்தி வைத்த கருணாநிதி பேசுகையில்.

நான் முழுமையான மகிழ்ச்சியுடன் இங்கு வரவில்லை. கட்சிக்காக தனது இறுதி மூச்சு வரை பணியாற்றியதமிழ்ப்பித்தனின் மறைவு என் உள்ளத்தில் மாறாத தழும்பை உருவாக்கிவிட்டது. தொண்டர்களால் தான் ஒருஇயக்கம் வளர முடியும். தலைவர்களால் அல்ல.

உறுதியும் நெஞ்சுரமும் தியாக உணர்வும் கொண்ட தமிழ்ப்பித்தன் போன்ற தொண்டர்களால் தான் இந்த இயக்கம்இந்த அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

இப்போது நேர்மையான, நாணயமான தொண்டர்கள் கட்சியைக் கட்டிக் காக்க வேண்டும் என்று கோரிக்கைவிடும் நிலை உருவாகியுள்ளது வருந்தத்தக்கது. திராவிட உணர்வை மீட்டுத் தரும் சுயமரியாதை உணர்வுள்ளவீரர்கள் திமுகவுக்குத் தேவை என்றார் கருணாநிதி.

ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ரத்து:

இந் நிலையில் அழகிரிக்குப் போட்டியாக தனது ஆதரவாளர்கள் துணையுடன் தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்த இருந்த ஸ்டாலின் அதை இப்போது ரத்து செய்துள்ளார்.

ஸ்டாலின்- அழகிரி ஆதரவாளர்கள் தென் மாவட்டங்களில் எலியும் பூனையுமாக உள்ளனர். அழகிரியின் கைதான் ஓங்கியுள்ளது. இதைத் தகர்க்கவும் தனது ஆதரவாளர்களுக்கு ஊக்கம் தரவும் தென் மாவட்டங்களில்கூட்டங்கள் நடத்த ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், கருணாநிதி மற்றும் குடும்பத்தினரின் வலியுறுத்தலால் அக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X