For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணிந்தது பா.ஜ.க: பொடா சட்டத்தை மறுபரிசீலனை செய்ய கமிட்டி அமைப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுகமிட்டியை உருவாக்கியுளளது. இதன்மூலம் திமுக, மதிமுகவின் நெருக்குதலுக்கு பா.ஜ.க. பணிந்துள்ளது.

முன்னாள் நீதிபதி அர்ஜூன் சகார்யா தலைமையில் இந்தக் கமிட்டி அமைக்கப்படுகிறது.

இந் நிலையில் நெடுமாறன் நடத்திய புலிகள் ஆதரவு கூட்டத்தை ஏற்பாடு செய்யதாக மேலும் ஒருவர் பொடாசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை மத்திய அரசு தடுக்கும் என துணைப் பிரதமர் அத்வானிஉறுதியளித்தார். ஆனால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர்பழ.நெடுமாறனும் பொடா சட்டத்தின் கீழ் தவறாகக் கைது செய்யப்பட்டிருப்பதை மத்திய அரசுகண்டுகொள்ளாமல் இருப்பதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக வைகோவும், ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகநெடுமாறனும் கைதாயினர்.

வைகோ கைதுக்குப் பின்னர் திமுக- மதிமுக உறவு வலுவானது. வைகோவை சிறைக்குப் போய் கருணாநிதிசந்தித்துவிட்டு வந்ததில் இருந்து திமுக சொல்வதையே மதிமுகவும் சொல்ல ஆரம்பித்துவிட்டது. அச்சந்திப்பின்போது அத்வானி மீது கருணாநிதியிடம் வைகோ ஆவேசப்பட்டார்.

அத்வானியின் பின்னணியுடன் தான் ஜெயலலிதா செயல்பட்டு வருவதாக கருணாநிதியும் கருதுகிறார்.இதையடுத்து வாஜ்பாயை ஆதரித்துக் கொண்டே பொடாவுக்கு எதிராகக் களமிறங்கினார் கருணாநிதி.

இந்தச் சட்டத்தின் கீழ் கைதான வைகோ விடுவிக்க வேண்டும் என கேபினட் கூட்டங்களில் திமுக குரல் தரஆரம்பித்தது. இதையடுத்து இச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க கமிட்டி அமைக்கப்படும் எனஅத்வானி அறிவித்திருந்தார். ஆனால், அதைச் சொல்லிவிட்டு மத்திய அரசு அமைதியாகவே இருந்து வந்தது.

இந் நிலையில் தான் நேற்று வைகோ, நெடுமாறனை விடுவிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயபா.ஜ.க., அதிமுக தவிர்த்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கருணாநிதி கூட்டினார்.

பா.ஜ.கவுக்கு எரிச்சலைத் தரும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கும் கருணாநிதி அழைப்பு விடுத்தார். ஆனால்,விடுதலைப் புலிகள்- வைகோ- நெடுமாறன் உறவைக் காரணம் காட்டி காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.அதே நேரத்தில் கருணாநிதியின் பொடா எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்தது.

திமுகவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மதிமுக, பா.ம.கவும் வரும் 29ம் தேதி வைகோவையும்நெடுமாறனையும் விடுவிக்கக் கோரி மாநில அளவில் இக் கட்சிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றன.(முதலில் 23ம் தேதி என அறிவிக்கப்பட்டது).

பொடா சட்டத்தைத் திருத்த மாட்டோம், அது தவறாக பயன்படுத்தப்பட்டதாக நினைப்பவர்கள் நீதிமன்றத்தில்முறையிடலாம் என்று கூறி வந்தது பா.ஜ.க. ஆனால், திமுக, மதிமுக. பா.ம.க. ஆகிய மூன்று கட்சிகளும்பொடாவையே காரணமாக வைத்து கூட்டணியில் இருந்து விலகவும் தயங்க மாட்டோம் எனபதை பா.ஜ.கவுக்குமறைமுகமாக உணர்ந்தியுள்ளன.

இதையடுத்து பொடா சட்ட மறு ஆய்வுக்கு ஒரு குழுவை மத்திய அரசு இன்று அமைத்தது. இத் தகவலை உள்துறைபொறுப்பு வகிக்கும் அத்வானி இன்று மக்களவையில் தெரிவித்தார். மக்களவையில் அத்வானி கூறியதாவது:

பொடா சட்டம் தீவிரவாதிகளுக்கு எதிராகத் தான் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் சாதாரணகிரிமினல்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க அந்தச் சட்டம் திருத்தப்படும். அது குறித்து பரிந்துரை செய்யபஞ்சாப் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அர்ஜூன் சகார்யா தலைமையில் கமிட்டி அமைக்கப்படுகிறது.

பாகிஸ்தான் எல்லையில் இருந்து தீவிரவாதிகள் அதிக அளவில் ஊடுருவியதால் கடந்த ஆண்டு இந்தச் சட்டததைக்கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால், மனித உரிமைகள் மீறப்படாமல் தடுக்க இந்தச் சட்டத்தில்விதிமுறைகள் உள்ளன.

பல்வேறு மாநிலங்களில் பொடா எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இந்தக் குழு ஆராயந்த பின்னர்தனது பரிந்துரைகளைச் செய்யும். இந்தக் கமிட்டியின் பிற உறுப்பினர்கள் குறித்து விரைவில் அறிவிப்புவெளியாகும் என்றார் அத்வானி.

சட்டம் வாபஸ் இல்லை: நாயுடு

இந் நிலையில் எக்காரணம் கொண்டு பொடா சட்டம் வாபஸ் பெறப்பட மாட்டாது என பா.ஜ.க. தலைவர்வெங்கைய்யா நாயுடு கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் விவாதித்துத் தான் அந்தச் சட்டம்நிறைவேற்றப்பட்டது. பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வைகோவின் செயலை தீவிரவாத செயலாகபா.ஜ.க. கருதவில்லை.

வைகோவை விடுவிக்க திமுக உள்ளிட்ட சில கட்சிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதால பலன் ஏதும்இல்லை. இந்தச் சட்டத்தை வாபஸ் பெற முடியாது.

சாத்தான்குளத்தில் அதிமுகவின் வெற்றியை பா.ஜ.க. மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது என்றார்.

மேலும் ஒருவர் கைது:

இந் நிலையில் பழ.நெடுமாறன் தலைமையில் நடந்த விடுதலைப் புலிகள் ஆதரவுக் கூட்டத்துற்கு ஏற்பாடுசெய்ததாகக் கூறி ஷாகுல் அமீது என்பவர் சென்னையில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல்14ம் தேதி சென்னையில் நடந்த கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகபழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், பாவாணன், தாயப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாகக் கூறி தமிழ்முழக்கம் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரானஷாகுல்அமீது தற்போது பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருணாநிதிக்கு வைகோ நன்றி:

தனது விடுதலைக்காகவும் பழ.நெடுமாறனின் விடுதலைக்காகவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி,உண்ணாவிரதப் போராட்டத்தையும் அறிவித்த திமுக தலைவர் கருணாநிதிக்கும் பிற கட்சிகளின் தலைவர்களுக்கும்மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நன்றி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பங்கேறபில்லை:

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோரை விடுவிக்கக் கோரி திமுகதலைமையில் அனைத்துக் கட்சிகள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்காது என அக்கட்சியின் செயல் தலைவர் இளங்கோவன் அறிவித்துள்ளார்.

வைகோ, பழ.நெடுமாறன் போன்ற புலிகள் ஆதரவுத் தலைவர்களின் விடுதலைககாக நடக்கும் இப்போராட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ள இயலாது என அவர் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X