For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈராக்: ஐ.நா. வாக்கெடுப்பை தவிர்க்கும் அமெரிக்கா

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

ஈராக் மீதான தாக்குல் நடத்த அனுமதி கோரும் தனது தீர்மானம் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் தோற்பது உறுதிஎன்பதை அமெரிக்கா உணர்ந்து கொண்டுவிட்டது. இதனால் தனது தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பேதேவையில்லை என கூறிவிட அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ஓட்டெடுப்பு இல்லாமல் போனால் ஐ.நா. அனுமதி இல்லாமலேயே ஈராக்கை அமெரிக்கா தன்னிச்சையாகத்தாக்கும்.

தீர்மானத்தை எதிர்த்து வீடோ அதிகாரத்தைப் பயன்படுத்துவோம் என ரஷ்யா அறிவித்தது தான் பேரிடியாகஅமெரிக்கா கருதுகிறது. பிரான்ஸை எப்படியாவது கடைசி நேரத்தில் சரி கட்டிவிடலாம் என்ற திட்டமும்பலிக்காமல் போய்விட்டது.

இது தவிர மெக்சிகோ, பாகிஸ்தான், அங்கோலா, சிலி போன்ற ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் தாற்காலிக உறுப்புநாடுகளும் கூட அமெரிக்காவின் நிதியுதவிக்காக மயங்கவில்லை. அவையும் இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்புதெரிவித்து வருகின்றன.

அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்போம் என சிலி நாடு இன்று அறிவித்துவிட்டது. மெக்சிகோ,பாகிஸ்தானும் கூட ஆதரவு தர முடியாது என்று கூறியுள்ளன.

மேலும் இங்கிலாந்து பிரதமருக்கு உள்ளாட்டில் ஏற்பட்ட அரசியல், பொது மக்கள் எதிர்ப்பால் அவரும் தனதுபடைகளை போரில் ஈடுபடுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஆனாலும் தீர்மானத்தை ஆதரித்துஇங்கிலாந்து ஓட்டு போடும். இதனால் பல்கேரியா, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய 3 நாடுகளின் ஆதரவு தான்அமெரிக்காவுக்கு உள்ளது.

தீர்மானம் கொண்டு வரப்பட்டால் 4:11 என்ற விகிதத்தில் அது தோல்வியடைவது உறுதியாகிவிட்டது. மீறிஆதரவாக நிறைய ஓட்டுக்கள் கிடைத்தாலும் பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை வீடோ அதிகாரத்தால் தீர்மானத்தை ரத்துசெய்யும்.

இதனால் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பை அமெரிக்கா ஒரு வாரத்துக்கு தள்ளிப் போட்டது. இந் நிலையில்தீர்மானத்தை ஓட்டெடுப்புக்கே விட வேண்டாம் என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் இதனைத் தெரிவித்தார். ஐ.நாவில் இரண்டாவதுதீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பைக் கோரினாலும் கோருவோம், கோராமலும் விடுவோம் என அவர் நிருபர்களிடம்தெரிவித்தார்.

ஏவுகணை கப்பல்கள் குவிப்பு:

இதற்கிடையே செங்கடல் பகுதியில் ஏவுகணைகளைச் செலுத்தும் போர்க் கப்பல்களையும், பி-2 குண்டு வீச்சுவிமானங்களையும் அமெரிக்கா குவிக்க ஆரம்பித்துள்ளது.

இந்தக் கப்பல்களில் இருந்து டோம்ஹாக் ரக பயங்கர ஏவுகணைகள் ஈராக் மீது வீசப்படும். செயற்கைக் கோள்உதவியுடன் மிகச் சரியாக இலக்கைத் தாக்கும் இந்த ஏவுகணைகளால் 1,600 கி.மீ. தூரம் பயணிக்க முடியும். பி-2விமானங்கள் அவ்வளவு சீக்கிரம் ரேடாரில் சிக்காதவை. எடை அதிகமான அதி சக்தி குண்டுகளை வீசும் திறன்கொண்டவை.

துருக்கியில் ஈராக்கைத் தாக்கும் அமெரிக்கப் படைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதால் செங்கடல் பகுதியில்உள்ள டீகோ கிரேசியா தீவில் தனது படைகளை அமெரிக்கா குவிக்கிறது. பி-2 விமானங்களுக்காக சிறப்புஹேங்கர்களும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.

செலவே இல்லாத போர்:

மிகக் குறைவான செலவிலேயே ஈராக்கை வென்றுவிட அமெரிக்காவால் முடியும் என அந் நாட்டின் கூட்டுப்படைகளின் தலைவர் ஜெனரல் டாமி பிராங்க்ஸ் கூறியுள்ளார்.

உயிர்களையும் இழக்காமல், செலவும் அதிகம் இல்லாமல் சதாம் ஹூசேனை பதவியில் இருந்து விரட்டும் பலம்எங்களிடம் உள்ளது என ஏ.பி.சி. தொலைக்காட்சியிடம் பிராங்க்ஸ் தெரிவித்தார். போரின் போது சரணடையவிரும்பும் ஈராக் படைப் பிரிவுகளுக்கு நிச்சயம் மன்னிப்புத் தரப்படும் என்றார். பிராங்க்ஸ் இப்போது கத்தார்நாட்டில் அமெரிக்க ராணுவ தளத்தில் உள்ளார்.

ஈரான் மீதும் பார்வை:

இதற்கிடையே ஈரானும் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதனால், அந் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் நீட்டித்து அமெரிக்க அதிபர்ஜார்ஜ் புஷ் இன்று உத்தரவிட்டார்.

ஈராக்- ஈரான்- வட கொரியா ஆகிய மூன்று நாடுகளும் சாத்தான்கள் என அமெரிக்கா வர்ணித்துள்ளது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X