காஷ்மீர்: தீவிரவாதிகள் சுட்டு 9 போலீசார் பலி
ஜம்மூ:
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 9 போலீசார் உள்பட 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 4 போலீசாரையும் அவர்கள் கடத்திக் கொண்டு போய்விட்டனர்.
உதாம்பூர் மாவட்டத்தில் கூல் பகுதியில் உள்ள ஒரு போலீஸ் சோதனைச் சாவடியை நேற்றுநள்ளிரவில் தீவிரவாதிகள் சுற்றி வளைத்தனர்.
பின்னர் அங்கிருந்த போலீசாரை நோக்கி அந்தத் தீவிரவாதிகள் சராமாரியாகத் துப்பாக்கியால் சுடஆரம்பித்தனர். மேலும் ராக்கெட்டுகளை வீசியும் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்தத் திடீர்த் தாக்குதலால் நிலைகுலைந்து போன போலீசார் பின்னர் சுதாரித்துக் கொண்டு பதிலடித்தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே சுமார் 2 மணி நேரம் துப்பாக்கிச் சண்டைநடந்தது.
இதில் ஒன்பது போலீசாரும் இரண்டு பொதுமக்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் இரண்டுஅதிகாரிகள் உள்பட நான்கு போலீசாரைக் கடத்திக் கொண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொண்டேதப்பியோடி விட்டனர்.
அப்போது மூன்று ஏ.கே.47 துப்பாக்கிகள், மெஷின் கன் மற்றும் ஏராளமான வெடி பொருட்களைதீவிரவாதிகள் விட்டுச் சென்றனர். போலீசார் அவற்றைக் கைப்பற்றினர். அப்பகுதியைச் சுற்றிலும்தீவிரவாதிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தத் துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த ஐந்து பேர் உதாம்பூர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள்தான் என்று போலீசார்கருதுகின்றனர்.


