மலேசியாவில் மேலும் 39 இந்தியர்கள் சித்திரவதை
கோலாலம்பூர்:
கடந்த வாரம் மலேசியப் போலீசாரால் அந்நாட்டில் உள்ள சாப்ட்வேர் என்ஜினியர்கள் உள்ளிட்ட270 பேர் அடித்துத் துன்புறுத்தப்பட்ட நிலையில் மேலும் 39 இந்தியத் தொழிலாளர்கள் சித்திரவதைசெய்யப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
ஒரு ரப்பர் தயாரிப்பு ஆலையில் வேலை பார்த்து வரும் இந்தத் தொழிலாளர்கள் தங்கள்சம்பளத்தைக் கேட்டதற்காக, அதன் முதலாளியும் அதிகாரிகளும் அடித்து உதைத்துள்ளனர்.
தெற்கு மலாக்காவில் உள்ள பியூடெக்ஸ் ரப்பர் உற்பத்தித் தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும்39 இந்தியத் தொழிலாளர்களுக்கு சரிவர சம்பளம் கொடுக்கப்படுவதில்லை.
ஒப்பந்தப்படி ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.7,600 சம்பளம் அளித்திருக்க வேண்டும். ஆனால்பாதிச் சம்பளத்தை மட்டுமே அந்தத் தொழிலாளர்களுக்கு ரப்பர் ஆலை கொடுத்து வந்துள்ளது.
சம்பளப் பாக்கியைக் கேட்கச் சென்ற தொழிலாளர்களை முதலாளியும், அதிகாரிகளும் சேர்ந்துஅடித்து உதைத்துத் துன்புறுத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 39 இந்தியர்களும் அங்குள்ள இந்தியத் தூதரகத்திலும் மலேசியப்போலீசாரிடமும் புகார் செய்துள்ளனர்.
மலேசியாவில் இந்தியர்கள் தொடர்ந்து சித்திரவதை செய்யப்படுவது அந்நாட்டில் உள்ள மற்றஇந்தியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


